உத்திரமேரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : மார் 24, 2020
Share
உத்திரமேரூர்;உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோவில் சந்து பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்.உத்திரமேரூர் பஜார் வீதியில், இரட்டைதாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள சந்து பகுதி தெருவில், பலர் சாலையை ஆக்கிரமித்து பழம், பூ, காய்கறி கடைகளை வைத்துஇருந்தனர். இந்த
 உத்திரமேரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உத்திரமேரூர்;உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோவில் சந்து பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, பேரூராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
உத்திரமேரூர் பஜார் வீதியில், இரட்டைதாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள சந்து பகுதி தெருவில், பலர் சாலையை ஆக்கிரமித்து பழம், பூ, காய்கறி கடைகளை வைத்துஇருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை, மார்ச், 23க்குள் அகற்ற வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கெடு விதித்தது. ஆனால், பேரூராட்சியின் உத்தரவை ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல், வழக்கம் போல், கடைகளை திறந்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் ஊழியர்கள், சந்து பகுதி தெருவில் இருந்த ஆக்கிரமிப்பு கடைளை அதிரடியாக அகற்றினர்.மீண்டும், அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X