அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மின்னல் வேகத்தில் பரவுது கொரோனா!' தடுக்க ஒத்துழைப்பு தேவை: விஜயபாஸ்கர்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 'மின்னல் வேகத்தில் பரவுது கொரோனா!' தடுக்க ஒத்துழைப்பு தேவை: விஜயபாஸ்கர்

சென்னை -''சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று, மின்னல் வேகத்தில் பரவுகிறது. தடை உத்தரவை மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்,'' என, சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:உலகில், 186 நாடுகளில், 'கொரோனா' வைரஸ் பரவியுள்ளது. நேற்று வரை, 3.32 லட்சம் பேருக்கு நோய் தொற்று உள்ளது; 14 ஆயிரத்து, 510 பேர் இறந்துள்ளனர்.
இத்தாலியில், ஒரே நாளில், 500க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலை உள்ளது.சீனாவின், வூகான் நகரில், முதலில், 250 பேருக்கு பாதிப்பு இருந்தது; 15 நாட்களில், 13 ஆயிரம்; 30 நாட்களில், 61 ஆயிரம்; 45வது நாளில், 81 ஆயிரமாக உயர்ந்தது.இத்தாலியில், 'ஒன்றும் இல்லை' என்றனர். கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை, 15 நாட்களில், 3,000; 30வது நாளில், 41 ஆயிரமாக உயர்ந்தது. வல்லரசு நாடான, அமெரிக்காவையே அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய அளவுக்கு, 10 நாட்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 442 ஆக உயர்ந்து விட்டது.
இந்நோய் தொற்று, சமூகத்தில் மின்னல் வேகத்தில் பரவுகிறது. எல்லோரையும் பாதிக்கிறது. வயதானவர்களுக்கு இறப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து, 12 ஆயிரத்து, 519 பேர் வந்துள்ளனர். அவர்களிடமிருந்து, சமுதாய தொற்று வந்து விடக்கூடாது. அதற்காகவே, 28 நாட்கள் தனித்திருக்க வலியுறுத்துகிறோம். அவர்கள் வெளியில் வரக்கூடாது; அவர்களை போலீசார் கண்காணிப்பர். வீடுகளில் தனித்திருப்பது கட்டாயம் என்பது அரசின் உத்தரவு. உத்தரவை மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாய தொற்று வந்து விடக்கூடாது என்பதால், இந்த விஷயத்தில், அரசு தெளிவாக உள்ளது. மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தால் போதும்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒருவரிடமிருந்து, 1 மீட்டர் தள்ளி இருங்கள். யாரிடமும் பேசாதீர்கள்; விலகி நில்லுங்கள். மக்கள் தாமாக முன்வந்து, தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 300 படுக்கைகள் உள்ள வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.

வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது சிகிச்சையில் உள்ள, 12 நோயாளிகளில், மதுரையில் உள்ள ஒருவர் மட்டும், நுரையீரல் நோய் இருப்பதால், ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் நலமுடன் உள்ளனர். அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், மக்கள் நலனுக்காக என்பதை உணர்ந்து, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan - london,யுனைடெட் கிங்டம்
25-மார்-202019:26:47 IST Report Abuse
magan welldone sir your doing wonderfull job keep it up
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-மார்-202007:43:59 IST Report Abuse
ocean kadappa india ஊரடங்கு உத்தரவு கொரோனா தாக்குலில் இருந்து பல மனித உயிர்களை காப்பாற்ற உதவும் அரிய பாது காப்பு கவசம். இந்த நேரத்தில் நாட்டு மக்கள் பயமின்றி அவரவர் வீடுகளில் வவ்வால்கள் வசித்தால் அதனை உடனே தீயிட்டு அழிக்க வேண்டும். பயமிருப்பின் அரசின் ஒத்துழைப்பை நாடவேண்டும்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
25-மார்-202007:38:07 IST Report Abuse
ocean kadappa india கொசுக்கள் நமைச்சலை தந்து மனித ரத்தத்தை உறிஞ்சும். பாம்பின் பல்லில் வைத்துள்ள நஞ்சில் ஒரு ஆளை கொத்தினாலே விஷம் தீரும். ஆனால் ஒரு வவ்வால் புழுக்கை மனித இனத்தையே சூறையாடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X