சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையில் ஈடுபட்ட மூன்றுபேர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement
 கொள்ளையில் ஈடுபட்ட மூன்றுபேர் கைது

திருப்போரூர்;கழிப்பட்டூர் தொழில்அதிபர் வீட்டில் கொள்ளைஅடித்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர் அடுத்த கழிப்பட்டூர், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 32; தொழிலதிபர்.கடந்த, 18ம் தேதி இரவு, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 20 லட்சம் ரூபாய், 40 சவரன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இது குறித்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், கோவளம் சாலையில் உள்ள கனகராஜ் என்பவரின் இரும்பு கடையில் புகுந்து, 2,500 ரூபாயை, மர்ம கும்பல் பறித்து சென்றது.கனகராஜின் புகாரின்படி, கேளம்பாக்கம் அருகே, ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரை மூவரை பிடித்து,போலீசார் விசாரித்தனர்.இதில், சென்னை, பெரும்பாக்கம் சந்தோஷ்குமார், 21, பாருக் ஷேக், 21, குகன்ராஜ், 22, என்பதும், கனகராஜ் மற்றும் தொழிலதிபர் கார்த்திக் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரிந்தது.அவர்களிடமிருந்து, ஒரு பட்டா கத்தி, இரு மொபைல் போன், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.பின், சந்தோஷ்குமார் வீட்டில் பதுக்கப்பட்டு இருந்த, 18.50 லட்சம் ரூபாய், 31 சவரன், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளையும் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, மூவரையும், போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, பள்ளிக்கரணை, சேலையூர், செம்மஞ்சேரி, பீர்க்கன்காரணை, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களிலும், கொள்ளை வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X