சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கஷ்டங்கள் கொடுத்த இறைவன் திடமான மனதை தந்துள்ளான்!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கஷ்டங்கள் கொடுத்த இறைவன் திடமான மனதை தந்துள்ளான்!

தமிழ், 'டிவி' உலகின் முன்னணி தொகுப்பாளராக இருந்து, வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களை அனுபவித்த போதிலும், மன உறுதி குலையாமல் இருக்கும் ராதிகா: கடந்த, 1993ல், சன், 'டிவி'யில் தொகுப்பாளினியாக சேர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு பின், விஜய், 'டிவி'க்கு சென்றேன். சிறு வயதிலேயே பரதநாட்டியம், கர்நாடக இசை நன்கு தெரியும் என்பதால், 2001ல், லண்டனில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தேன்.ஆறு மாதங்கள் அங்கு இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது; அங்கேயே திருமணம் ஆனது. இந்த காலத்தில், அப்பாவும் இறந்து விட்டார். கர்ப்பம் தரித்தேன். வயிற்றில் இருந்த குழந்தைக்கு, முதுகெலும்பு பகுதியில் பிரச்னை என தெரிந்து, அதிர்ச்சி அடைந்தேன். வயிற்றில் இருந்த குழந்தைக்கு, இதய துடிப்பு குறைந்ததால், 'ஷாக்' கொடுப்பது போன்ற சிகிச்சை அளித்து, வலுக்கட்டாயமாக வெளியே எடுத்தனர். என் மகன் லட்சுமண், 2004ல் பிறந்தான். பிறந்தது முதல் ஏராளமான உடல் நலப் பிரச்னைகள் அவனுக்கு இருந்தன. இறுதியில், 'ஆட்டிசம்' எனப்படும், மூளை தொடர்பான பிரச்னை இருப்பதை அறிந்தோம். எதைக் கண்டாலும் பயப்படும், தெளிவாக பேசத் தெரியாத அவனுக்கு, இந்த உலகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அரும்பாடு பட்டேன்; சராசரிக்கும் சிறப்பான மனிதனாக, இப்போது ஆக்கி விட்டேன். இப்போது, ஏராளமான உடல் நலக்குறைப்பாட்டால் அவதிப்படும் எனக்கு, அவன் தான் ஆறுதல் கூறுகிறான். நடக்க முடியாது; நீண்ட நேரம் உட்கார முடியாது. சுவாச கோளாறுடன், கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டதால், அதை நீக்கி விட்டேன். அதன் பின், சிறுநீரில் ரத்தமாக போனது. மருத்துவமனைக்கு சென்ற போது, ஒரேயொரு சிறுநீரகம் தான் எனக்கு இருப்பது தெரிந்தது.அந்த சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டது; அதுவும் போதாது என்று, முதுகு தண்டுவடத்தில், வினோத நோய் ஏற்பட்டது. அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது, கழுத்து எலும்புகள் விலகி இருந்தது தெரிந்தது. ஒரு பெண்ணுக்கு இத்தனை பிரச்னைகளா என, எண்ணும் அளவுக்கு, காதில் பிரச்னை, இதயத்தில் கோளாறு என, பலவீனமான உடலைத் தான், ஆண்டவன் எனக்கு கொடுத்து உள்ளான். எனினும், எந்த கஷ்டத்திலும், பிரச்னையிலும், குலையாத, உறுதியான மனதை எனக்கு தந்துள்ளான்.அது போல, எந்த கெட்ட விஷயங்களையும், உடனே மறக்கும் சக்தியும் எனக்கு உள்ளது. அதனால், என் வாழ்க்கையை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆக்கியுள்ளேன்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ahmed A R - லால்பேட்டை,இந்தியா
25-மார்-202009:01:59 IST Report Abuse
Ahmed A R வீரப்பெண்மணி. எல்லா சிரமங்களும் அகன்று வாழ்வில் மகிச்சி பெருகிட சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-மார்-202007:41:56 IST Report Abuse
கல்யாணராமன் சு. படிப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது ............. இருப்பினும், இவருக்கு ஆண்டவன் மனம் தளராத ஒரு உறுதியை கொடுத்திருக்கிறான். அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை ...... இவர் அனைத்திலிருந்தும் மீண்டு வர வாழ்த்துக்கள் ............
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
25-மார்-202005:43:15 IST Report Abuse
Siva Kumar கடவுள் கைவிடமாட்டார். கடவுளிடம் சரணடையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X