கோகோ கோலா' தொழிற்சாலை மீது வழக்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோகோ கோலா' தொழிற்சாலை மீது வழக்கு ஹிமாச்சல பிரதேசத்தின், நலகர் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி, 'கோகோ கோலா' தொழிற்சாலை செயல்பட்டு வந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அத்தொழிற்சாலையை நடத்தி வந்த, 'கிரிஷ் பிளக்சிபேக்' நிறுவனம் மற்றும் நிறுவனர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த குற்றத்திற்கு, ஆறு மாத சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, சட்டம் வகை செய்கிறது.ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம்வீடு தேடி வரும் மருந்துகள்கர்நாடகத்தில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவ, 'த்ரீ வீல்ஸ் யுனைடெட்' என்ற நிறுவனம் புதிய சேவையை துவக்கியுள்ளது. இதன்படி, முதியோர்களுக்கு, அவசியமான மருந்துகளையும், நுகர்வோருக்கு, அத்தியாவசியப் பொருட்களையும், 'சப்ளை' செய்ய, ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இரு தரப்பையும் இணைக்கும் பாலமாக, த்ரீ வீல்ஸ் செயல்படுகிறது. தலைமை ஆசிரியர்கள் இருவர் பணியிட மாற்றம்மேற்கு வங்க அரசு, அனைத்து அரசு பள்ளிகளையும், ஏப்., 15 வரை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால், மதிய உணவின்றி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, அவர்கள் சார்பில், பாதுகாவலர்கள் பள்ளிக்கு வந்து, அரிசி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த விதிமுறையை மீறி, மாணவர்களிடம் உணவுப் பொருட்களை வழங்கிய குற்றச்சாட்டில், இரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவுசமீபத்தில், பிரிட்டனில் இருந்து மும்பை வந்த மாணவர் ஒருவர், வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். அதை மீறி, அந்த மாணவர், தன் நண்பரை பார்க்க, நவி மும்பையில் இருந்து, தானே சென்றுள்ளார்.

இது தெரியவந்ததும், போலீசார், அவர் மீது, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், வழக்கு பதிவு செய்துள்ளனர்.276 மருத்துவர்கள் கேரளாவில் நியமனம்கேரளாவில், கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து வைத்துள்ள மருத்துவர்களின் பட்டியலில் இருந்து, 276 மருத்துவர்களுக்கு, கேரள அரசு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. அவர்கள் உடனடியாக, மருத்துவ சேவைகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், துணை மருத்துவ ஊழியர்களும் நியமிக்கப்ப்பட உள்ளதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.முக கவசம் பயன்படுத்தமறுத்தவர் கைதுகேரள அரசு, 'வெளிமாநிலங்களில் இருந்து வரும் விமான பயணியர், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்' என, உத்தரவிட்டுஉள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து, விமானம் மூலம், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய, லமி அரக்கல் என்பவர், முக கவசம் பயன்படுத்த மறுத்து, அதிகாரிகளுடன் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். சில மணி நேரங்களுக்குப் பின், அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.பிரதமர் காப்பீடு திட்டத்தில் 'கொரோனா'வுக்கு சிகிச்சைபிரதமர் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு திட்டத்தில், ஏழை குடும்பத்துக்கு, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், விரைவில், கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சையும் சேர்க்கப்பட உள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X