ஷாஹீன் பாக் தொடர் போராட்டம் | Dinamalar

ஷாஹீன் பாக் தொடர் போராட்டம்

Added : மார் 24, 2020
Share

புதுடில்லி :டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரசை தடுக்க, முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதால், போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மூன்று மாதங்களுக்கும் மேலாக, பெண்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், டில்லி அரசு முழு அடைப்பை அறிவித்துள்ளது.இதனால், போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைந்து செல்லும்படி, நேற்று, போலீசார் அறிவுறுத்தினர். அதனால், ஆண்கள் உட்பட, ௫௦க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து சென்றனர். ஆனால், ஆறு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர், போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவர்களை, போலீசார் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து, தன்னார்வலர் ஒருவர் கூறியதாவது:போலீசார் கேட்டுக் கொண்டவுடன், போராட்டம் நடத்திய பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.கடந்த, 22ல், நாடு முழுவதும், மக்கள் ஊரடங்கு நடைபெற்ற போதும், ஐந்து பெண்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மற்றவர்கள் ஒற்றுமையின் அடையாளமாக, தங்கள் செருப்புகளை விட்டு சென்றிருந்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, தெற்கு டில்லியில், ஹவுஸ் ராணி பகுதியில் போராட்டம் நடத்தியவர்களும், போலீசார் கூறியதால் கலைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X