32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 வரை..முழு அடைப்பு

Updated : மார் 26, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 32 மாநிலங்கள் ,மற்றும், யூனியன், பிரதேசங்களில், 31 வரை...முழு அடைப்பு

புதுடில்லி, 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, நாட்டின், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 560 மாவட்டங்களை, இம்மாதம், 31 வரை முழுமையாக மூட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர, மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், தேவைப்பட்டால், ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுதும், 500க்கும் அதிகமானோர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் ஒருவருக்கொருவர் விலகி இருப்பது மட்டுமே, வைரஸ் தொற்றை பரவாமல் கட்டுக்குள் வைக்கும் என்பதால், நாடு முழுதும், அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, கடந்த, 22ல், காலை, 7:00 மணி முதல், அடுத்த நாள் காலை, 6:00 மணி வரை, ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், நாட்டில் உள்ள, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை, இம்மாதம், 31 வரை, முழுமையாக மூட, மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த காலகட்டத்தில், அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து, முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.சில தனியார் நிறுவன ஊழியர்கள், வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம், 28 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன.


கடிதம்

இதில், ராஜஸ்தான், உத்தரகண்ட், மேற்கு வங்கம், கோவா, நாகாலாந்து, திரிபுரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா, ஜார்க்கண்ட், பீஹார், அருணாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்கள் முழுமையாக மூடப்படுகின்றனஅதே போல, தமிழகம், கேரளா, ஹரியானா, கர்நாடகா, அசாம் மாநிலங்கள் போக, டில்லி, சண்டிகர், லடாக், ஜம்மு - காஷ்மீர், டாமன் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்கள், இம்மாதம் 31 வரை, முழுமையாக மூடப்படுகின்றன.

மேலும், மூன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 58 மாவட்டங்கள் மட்டும் முழுமையாக மூடப்படுகின்றன. ஒரு யூனியன் பிரதேசத்தில், ஒரு சில நடவடிக்கைகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதில், பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி அரசுகள், முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கும், கேபினட் செயலர் ராஜிவ் கவுபா, கடிதம் ஒன்றை நேற்று எழுதினார்.
அதன் விபரம்:முழுமையாக மூடப்பட்டுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், அரசின், 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க வேண்டும். மத்திய அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவுகள், மீறப்படாமல் பின்பற்றப்பட வேண்டும்.


அறிவுறுத்தல்



தேவைப்பட்டால், அந்தந்த மாநில அரசுகள், கூடுதல் தடை உத்தரவுகளை பிறப்பித்துக் கொள்ளலாம். தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.'அவசியம் இன்றி, சாலைகளில் மக்கள் நடமாட்டம் முற்றிலு மாக தவிர்க்கப்பட வேண்டும்' என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரவை மதிக்காமல், மக்கள் வெளியே நடமாடத் துவங்கினால், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துக் கொள்ளவும், மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், 17 மாவட்டங்கள் மட்டும் முழுமையாக மூடப்படும் என, முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதையுமே மூட, உத்தரவிடப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய முழு அடைப்பு



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக,உலக அளவிலான மிகப் பெரிய முழு அடைப்புக்கு, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 'ஏற்கனவே, பொருளாதார மந்த நிலை நிலவும் நேரத்தில், இந்த முழு அடைப்பு, பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
நாட்டின் முதன்மையான தொழிலதிபர்கள், வங்கி உயரதிகாரிகளுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று உரையாடினார். அப்போது, கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவும், கடனை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு, அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-மார்-202003:56:42 IST Report Abuse
blocked user பொருளாதாரம் உயிரை விட முக்கியமானது என்பது பலருக்கு புரிந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X