ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைப்பு

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுடில்லி ; நாளை நடக்கவிருந்த ராஜ்யசபா தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும், 31 ம் தேதிக்குப் பின் ஆலோசித்து, தேர்தல் நடத்தப்படும் என, தெரிகிறது.

ராஜ்யசபாவில், 55 காலி இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 37 வேட்பாளர்கள், ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதையடுத்து, மீதி, 18 இடங்களுக்கான தேர்தல், நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 'கொரோனா' வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தலை, 31 ம் தேதிக்குப் பின் நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி, அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராஜ்யசபா தேர்தலில், அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகள், எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இணைந்து பணியாற்ற வேண்டும்.கொரோனா பரவுவதை தடுக்க, கூட்டம் கூடாமலிருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதனால், ராஜ்யசபா தேர்தலை, 31ம் தேதிக்குப் பின் ஆலோசித்து நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, ராஜ்யசபா செயலகம், வரும், 27 வரை மூடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X