'லோக்சபாவில் 90 சதவீத செயல்பாடு'

Added : மார் 24, 2020
Share
Advertisement
 'லோக்சபாவில் 90 சதவீத செயல்பாடு'

புதுடில்லி : “நடந்து முடிந்த பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபாவில், 90 சதவீத அலுவல்களும், ராஜ்யசபாவில், 74 சதவீத அலுவல்களும் நடந்துள்ளன,” என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி, 31ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் பகுதி, பிப்ரவரி, 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இரண்டாம் பகுதி, மார்ச், 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரை, வரும், ஏப்ரல், 3 வரை நடத்த, முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவல் காரணமாக, நேற்று முன்தினம், இரு சபைகளும்,தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில், நடந்து முடிந்த கூட்டத்தொடரில், லோக்சபாவின் செயல்பாடு குறித்து, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், முதல் பகுதியில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், ஒன்பது அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாம் பகுதியில், இரு சபைகளிலும், 14 அமர்வுகள் நடைபெற்றன.

இந்த கூட்டத்தொடரில், லோக்சபாவில், 90 சதவீத அலுவல்களும், ராஜ்யசபாவில், 74 சதவீத அலுவல்களும் நடந்துள்ளன.லோக்சபாவில், 18 மசோதாக்களும், ராஜ்யசபாவில், ஒரு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தவிர, லோக்சபாவில், 15 மசோதாக்களும், ராஜ்யசபாவில், 13 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. கொரோனா பரவி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக, கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X