8 மாதங்களுக்குப் பிறகு ஒமர் அப்துல்லா விடுதலை

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஸ்ரீநகர் : பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லா, 50, விடுதலை செய்யப்பட்டார். எட்டு மாத சிறை வாசத்தில் இருந்த அவர், நேற்று வீடு திரும்பினார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆக., 5ல் நீக்கப்பட்டது. மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. வீட்டுக் காவல்அப்போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர், மெஹபூபா முப்தி ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மிகவும் கடுமையான, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பரூக் அப்துல்லா, சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருடைய மகனும், முன்னாள் முதல்வருமான, ஒமர் அப்துல்லா மீதான, பொது பாதுகாப்பு சட்ட வழக்கு, நேற்று ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவருடைய அரசு இல்லத்துக்கு அருகே உள்ள, ஹரி நிவாஸ் என்ற அரசு பங்களாவில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.சிறைவாசம்எட்டு மாதங்கள் சிறை வாசத்தில் இருந்து விடுதலையான ஒமர் அப்துல்லாவை, அவருடைய தாய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.ஒமர் அப்துல்லா மீது, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து, அவருடைய சகோதரி, சாரா அப்துல்லா பைலட், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அமர்வு, 'ஒமரை விடுதலை செய்வது குறித்து, ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். 'அல்லது இந்த வழக்கில் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்' என, சமீபத்தில் கூறியிருந்தது.இந்த வாரத்தில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுஉள்ளார்.இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, மெஹபூபா முப்தியின் சிறைவாசம் தொடர்கிறது. ஒமர் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்பதாக, மெஹபூபா முப்தியின் மகள், இல்திஜா முப்தி, சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X