'கொரோனாவை தடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது'

Updated : மார் 26, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1+ 15)
Share
Advertisement
 Corona, India, கொரோனாவை, தடுக்கும் ,திறன்,  பாதிப்பு, இந்தியாவுக்கு, உள்ளது, அலைஸ் ஜி வெல்ஸ்

புதுடில்லி :'சின்னம்மை, போலியோ போன்றவற்றை முற்றிலும் ஒழித்த இந்தியாவுக்கு, கொரோனா வைரசை தடுப்பதற்கான முழு திறனும் உள்ளது' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், மைக்கேல் ரியான் கூறியதாவது:உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடுகளின் பட்டியலில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனாலும், சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை அடியோடு ஒழித்துக் கட்டிய அனுபவம், இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உண்டு; இது, சர்வதேச அளவிலான மிகப் பெரிய சாதனையாக உள்ளது. அதேபோல், கொரோனா வைரசை தடுப்பதற்கான திறனும், இந்தியாவுக்கு உள்ளது என நம்புகிறேன். இந்த விஷயத்தில், மற்ற உலக நாடுகளுக்கு இந்தியா, முன் உதாரணமாக திகழ்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல், டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:சீனாவில் இந்த வைரஸ் பரவிய, 67 நாட்களில், ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பின் மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியது. அடுத்த, 11 நாட்களில், மேலும் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பின், நான்கு நாட்களில், மேலும், ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரவியது. இதை வைத்து, கொரோனா வைரஸ், எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

அமெரிக்கா பாராட்டுதெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர், அலைஸ் ஜி வெல்ஸ் கூறுகையில், ''கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவில் நடத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு, மிகச் சிறப்பான நடவடிக்கை. ''இந்த ஊரடங்கின் போது, அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது, பாராட்டுக்குரியது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-மார்-202004:03:23 IST Report Abuse
blocked user நமது கலாச்சாரத்தை பின்பற்றினால் நோய்கள் பரவ வாய்ப்பு மிக மிகக்குறைவு. நாம்தான் அதை விட்டு அதிகநாள் ஆகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X