சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு குரல் ஓட்டெடுப்பில் வெற்றி| Dinamalar

சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு குரல் ஓட்டெடுப்பில் வெற்றி

Updated : மார் 26, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (9)
Share
போபால்,:மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு, குரல் ஓட்டெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடந்தது. காங்., கட்சியின் மூத்த தலைவராக இருந்த, ஜோதிராதித்யா சிந்தியா, கட்சியிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் இணைந்தார். உத்தரவுஇவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர்,
 சிவ்ராஜ் சிங் சவுகான், அரசு, குரல் ,ஓட்டெடுப்பு,வெற்றி

போபால்,:மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு, குரல் ஓட்டெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடந்தது. காங்., கட்சியின் மூத்த தலைவராக இருந்த, ஜோதிராதித்யா சிந்தியா, கட்சியிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் இணைந்தார்.


உத்தரவு



இவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 22 பேர், ராஜினாமா செய்தனர். இதையடுத்து, கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்தது. பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, கவர்னர், லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே, கமல்நாத், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, நேற்று ம.பி., சட்டசபை கூடியது. பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையில் ஆஜராக வேண்டும் என, கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படிருந்தது.

இதையடுத்து, பா.ஜ., உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் சபைக்கு வரவில்லை. சபாநாயகராக இருந்த, காங்கிரசின் பிரஜாபதி, தார்மிக கடமையை சுட்டிக்காட்டி, பதவியை ராஜினாமா செய்வதாக, நேற்று முன்தினம் இரவு அறிவித்திருந்தார்.


ராஜினாமா

இதனால், பா.ஜ., வின் மூத்த உறுப்பினரான, ஜக்தீஷ் தேவ்டா, சபாநாயாகராக இருந்து, நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தினார். அப்போது, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், நம்பிக்கை ஓட்டு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பின் மூலம், நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின், சட்டசபை ஒத்திவைக்கப் பட்டது.

தற்போது, ம.பி., சட்டசபையில், பா.ஜ.,வுக்கு, 106 எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரசுக்கு, 92 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த, 22 பேர், பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.


சவுகானுக்கு உள்ள சவால்!

சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச மாநில அரசியல்வாதிகளால், 'மாமாஜி' என, செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர், 2005 நவம்பரிலிருந்து, ம.பி., முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார். கடந்த, 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்ததால், அந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார். தற்போது, 15 மாத இடைவெளிக்குப் பின், மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள சவுகான், உடனடியாக மூன்று முக்கிய பிரச்னைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

முதலாவது, மாநிலத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேண்டும். அடுத்ததாக, தற்போதுள்ள தன் ஆதரவாளர்களை தொடர்ந்து, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, அவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.மூன்றாவதாக, 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தலில், குறைந்தது, 15 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே, நிலையான ஆட்சி நடத்த முடியும்.


சிந்தியாவுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு



காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ., வில் இணைந்த ஜோதிராதித்யாவுக்கு எதிராக, நிலத்தை விற்பதற்காக போலி ஆவணங்களை கொடுத்தாக, சுரேந்திர ஸ்ரீவத்சவா என்பவர், ம.பி., போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்படி, ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜோதிராதித்யாவுக்கு எதிரான இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X