பொது செய்தி

இந்தியா

அஸ்தியை கேட்கும் அமெரிக்க மகன்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோல்கட்டா : கோல்கட்டாவில், கொரோனா வைரசால் பலியான, மத்திய அரசு பணியாளரின் உடல் எரிக்கப்பட்டது. 'அவரது அஸ்தியை, குடும்பத்தினரிடம் ஒப்படையுங்கள்' என, அமெரிக்காவில் படிக்கும் அவரது மகன், மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் கோல்கட்டாவில், கோரோனா வைரசால் பாதிக்கப்பட்ட, மத்திய அரசு பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் பலியானார்.
நாட்டில், கொரோனாவால் பலியான எட்டாவது நபரான இவரது உடலை, உறவினர்கள், அருகில் உள்ள மயானத்திற்கு, நேற்று முன்தினம் இரவு எடுத்து சென்றனர். கொரோனா பரவும் என்ற அச்சத்தால், அவர்களை மயானத்திற்குள் நுழையவிடாமல், அப்பகுதியினர் தடுத்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன், அவரது உடல் எரிக்கப்பட்டது.
இதையடுத்து, பலியானவரின் மனைவி, தாயார் மற்றும் மாமியார், ௨௧ம் தேதி முதல் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இறந்தவரின், ௨௭ வயது மகன், அமெரிக்காவில் படித்து வருகிறார். இவர், அரசு அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. விதிகள் அனுமதித்தால், என் தந்தையின் அஸ்தியை, குடும்பத்தினரிடம் ஒப்படையுங்கள்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X