முதியோர் இல்லத்தில் சடலங்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கொரோனா வைரசால், 35 ஆயிரத்து, 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை, 2,316 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ராணுவத்தினர், நாட்டில் உள்ள முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்தபோது, அங்கு பல முதியவர்கள், தனித்து விடப்பட்டுள்ளதையும், சிலர் உயிரிழந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, “சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ராணுவ அமைச்சர், மார்கரிட்டா ரோப்லஸ் தெரிவித்துள்ளார்.


கை கழுவ முடியாத மக்கள்


கொரோனா வைரஸ், வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மக்களுக்கு சொல்லப்பட்டு வருகின்றன. கைகளை, கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்காசிய நாடான ஏமனில், சுத்தமான குடிநீர் கிடைப்பதே அரிதாக இருப்பதால், இங்குள்ள மக்கள், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.கேமரா மூலம் கண்காணிப்புகொரோனா வைரஸ் பரவி வருவதால், ரஷ்யாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் மாஸ்கோவின் பல பகுதிகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கேமராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. அவை, வெளியே உலாவும் நபர்களை கண்டறிய உதவும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை, அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவினருக்கு கட்டுப்பாடுவட அமெரிக்க நாடான கியூபாவில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்களில் தங்கி இருக்கும் அவர்கள், மீண்டும் விமான சேவை துவங்கும் வரை, வெளியே வரக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X