சீனாவில் 78 பேருக்கு, 'கொரோனா' தொற்று ஹுபய், வூஹானில் இயல்பு நிலை திரும்புகிறது

Added : மார் 24, 2020
Share
Advertisement
 சீனாவில் 78 பேருக்கு, 'கொரோனா' தொற்று ஹுபய், வூஹானில் இயல்பு நிலை திரும்புகிறது

பீஜிங் வெளிநாடுகளில் இருந்து, சீனாவுக்கு வந்த, 74 பயணியர் உட்பட, மொத்தம், 78 பேருக்கு, 'கொரோனா' தொற்று இருப்பது, நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. மேலும், ஏழு பேர் உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று தெரிவித்தனர்.சீனாவின், ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்த ஜனவரி முதல், கொரோனா வைரஸ் பரவத்துவங்கியது. வீடு திரும்பினர்இதையடுத்து, ஜனவரி 23ல், ஹுபய் மாகாணம், முற்றிலுமாக மூடப்பட்டது. ஆறு கோடி மக்கள், வீடுகளுக்குள் முடங்கினர். வைரஸ் தொற்றின் தீவிரம், மெல்ல குறைந்து வருவதை அடுத்து, சீனாவில் இயல்பு நிலை திரும்புகிறது. வெளிநாடுகளில் இருந்து சீனா வந்த, 74 பயணியர் உட்பட, மொத்தம் 78 பேருக்கு, கொரோனா பாதிப்பு, நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சீனா முழுவதும், நேற்று முன் தினம் நிலவரப்படி, 81 ஆயிரத்து, 171 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதில், 73 ஆயிரத்து, 159 பேர், சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 4,735 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம், ஏழு பேர் பலியானதை அடுத்து, சீனாவில், கொரோனா தொற்றுக்கு, இதுவரை, 3,277 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டது.வெளியேற அனுமதிபல்வேறு நாடுகளில் இருந்தும், சீன தலைநகர் பீஜிங் வரும் விமானங்கள், சீனாவில் உள்ள மற்ற, 12 விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. அங்கு பயணியர், 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பின், வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.ஹாங்காங்கில், 356 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; நான்கு பேர் பலியாகி உள்ளனர். மக்காவில், 25 பேருக்கும், தைவானில், 195 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹுபய் மற்றும் வூஹானில்கட்டுப்பாடுகள் தளர்வுசீனாவின், ஹுபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. இதையடுத்து, ஜனவரி 23ல், ஹுபய் மாகாணம் முற்றிலுமாக மூடப்பட்டது. மக்கள், வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது.தற்போது, ஹுபய் மற்றும் வூஹானில், வைரஸ் தொற்று, கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த, சீன அரசு முடிவு செய்துள்ளது. ஹுபய் மாகாணத்தை விட்டு வெளியேறிய மக்கள், இன்று முதல், தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம், 8 முதல், மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், மக்கள் மற்ற நகரங்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர் என்றும், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று அறிவித்தனர். சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி பார்வையாளர்களுக்கு நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X