விமானங்களை நிறுத்த இடமில்லை விமான நிறுவனங்கள் தவிப்பு| Dinamalar

விமானங்களை நிறுத்த இடமில்லை விமான நிறுவனங்கள் தவிப்பு

Added : மார் 24, 2020
Share
சிட்னி :கொரோனா பரவலால், பல நாடுகளின் விமான சேவை ரத்தானதால், விமானங்களை நிறுத்தி வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்ததும், அந்த நாட்டிற்கான விமான சேவைகள் குறைந்தன. இதனால், உலகளவில், 2,500க்கும் அதிகமான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தாண்டு துவக்கத்தில், ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா

சிட்னி :கொரோனா பரவலால், பல நாடுகளின் விமான சேவை ரத்தானதால், விமானங்களை நிறுத்தி வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்ததும், அந்த நாட்டிற்கான விமான சேவைகள் குறைந்தன. இதனால், உலகளவில், 2,500க்கும் அதிகமான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்தாண்டு துவக்கத்தில், ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா பரவத் துவங்கியது. இதனால், விமான சேவை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக, விமான நிலையங்களில் நிற்கும் விமானங்களின் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 5,000 ஆக அதிகரித்தது. இதனால், விமான நிலையங்களில், விமானங்களை நிறுத்த முடியாமல் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விமான ஓடுதளம், பராமரிக்கும் இடம், பழுது பார்ப்பு பகுதி என, அனைத்து இடங்களிலும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜெர்மனியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிராங்பர்ட் விமான நிலையம், ஏராளமான விமானங்களுடன் நிசப்தமாக காட்சியளிக்கிறது. சுவிட்சர்லாந்தில், ராணுவ விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மணிலாவில், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், லுப்தான்சாவுக்கு சொந்தமான இடத்தில், விமானங்களை நிறுத்தியுள்ளது. குயின்டாஸ் நிறுவனம், அதன் 100 விமானங்களை, ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையங்களிலும், அலைஸ் ஸ்பிரிங்ஸ் பாலைவனப் பகுதியிலும் நிறுத்தியுள்ளது. மெல்போர்ன், பிரிஸ்பேன் விமான நிலையங்கள், சில இடங்களை ஒதுக்கி, இலவசமாக விமானங்களை நிறுத்த சம்மதித்துள்ளன.

இதேபோல, கத்தாய் பசிபிக் நிறுவனம், ஹாங்காங் விமான நிலையத்தில், பராமரிப்பு இடங்கள், அதிகம் பயன்படுத்தாத தொலைதுார ஓடுபாதைகளில், விமானங்களை நிறுத்தியுள்ளது. சில நாடுகளில், சிறிய விமான நிலையங்கள், விமான நிறுத்துமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனிடையே, ஆஸ்திரேலியாவின் குயின்டாஸ் ஏர்வேஸ், விமான சேவை குறைந்ததால், 20 ஆயிரம் ஊழியர்களை விடுப்பில் அனுப்பியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X