பிரதமருக்கு தொற்று வந்தால்... பிரிட்டன் அரசு முன்னெச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement
 பிரதமருக்கு தொற்று வந்தால்... பிரிட்டன் அரசு முன்னெச்சரிக்கை

லண்டன்
'ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சன், நலமுடன் உள்ளார். ஒருவேளை அவருக்கு, 'கொரோனா' வைரஸ் தொற்று ஏற்பட்டால், அரசு நிர்வாகத்தை, வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் கவனிப்பார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனில், 5,700 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதில், 2,200 பேர், லண்டன்வாசிகள். இதுவரை, 281 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அதையடுத்து, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுஉள்ளது.வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க, சேர்ந்து வாழாத இரண்டு பேர், ஒரு இடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.ஒரே வேளை பிரதமர், போரிஸ் ஜான்சனுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டால், அரசு நிர்வாகத்தை யார் கவனிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரிட்டன் அரசு, நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.'ஒருவேளை பிரதமருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அமைச்சரவையில் மூத்தவரான, வெளியுறவு அமைச்சர், டொமினிக் ராப், அரசு நிர்வாகத்தை கவனிப்பார்' என, அதில் கூறப்பட்டுஉள்ளது.உணவு, மருந்து தவிர அனைத்துக் கடைகளும், பிரிட்டனில் மூடப்பட்டுள்ளன. தேவையில்லாமல், யாரும் தெருவில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று, அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், ரயில்களில், மக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X