சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கூவத்துார்: நாகப்பட்டினம் மாவட்டம், அகரம்குடியைச் சேர்ந்த, குமார் மகன் அலெக்ஸ்பாண்டியன், 24.வேலைக்கு செல்லாத இவரை, பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில், 19ம் தேதி, வீட்டிலிருந்து வெளியேறி, செங்கல்பட்டு மாவட்ட பகுதி வந்துள்ளார்.கடந்த, 21ம் தேதி, கூவத்துார் அடுத்த, முகையூர் பட்டரைக்கழனி பகுதி, சவுக்குத்தோப்பில், மரத்தில் துாக்கிட்டு இறந்தார். கூவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாம்பு கடித்து சிறுவன் பலி
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வேலு- - லதா தம்பதியின் மகன் காமேஷ், 3.கடந்த, 17ம் தேதி, வீட்டின் அருகே, பழைய ஓடு, மரக்கட்டைகள் உள்ள இடத்தில் விளையாடினான். அப்போது, விஷப்பாம்பு, அவனது வலது காலில் கடித்துள்ளது.மயங்கி நிலையில் கிடந்த காமேஷை, பெற்றோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று முன்தினம் இறந்தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X