பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு பயணியரால் மாமல்லையில் அச்சம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடலோர வீடுகளில், வெளிநாட்டுப் பயணியர் தங்கியிருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாமல்லபுரம் சிற்ப பகுதிகள், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக மூடப்பட்டு உள்ளன. விடுதிகள், ரெஸ்டாரன்ட்டுகள் ஆகியவையும் மூடி, பயணியர் வருவது தடைபட்டு, தற்போது வெறிச்சோடியுள்ளது.நேற்று மாலை முதல், 31ம் தேதி வரை, ஊரடங்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டுப் பயணியர், இங்கு முகாமிட்டுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலமே, கொரோனா வைரஸ் பரவுவதாக கருதும் சூழலில், இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.

விடுதிகள் இயங்காதபோதும், அவர்களை, கடலோர வீடுகளில் தங்க அனுமதித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அரசு, அவர்களை உடனே வெளியேற்ற, வலியுறுத்துகின்றது.கிழக்கு கடற்கரை சாலையில், பிற பகுதி ஒதுக்குப்புற விடுதிகளிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X