பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி தடை நிவாரணம் கிடைக்குமா?

Added : மார் 24, 2020
Share
Advertisement

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்க, ஆவணம் பரிசீலிப்பதாக, மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில், கானத்துார், ரெட்டிகுப்பம் முதல், இடைக்கழிநாடு, ஆலம்பரைகுப்பம் வரை, மீனவர்கள் வசிக்கின்றனர்.வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து, விற்கின்றனர். 7,000க்கும் மேற்பட்டோர், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.கடல் மீன்வள பெருக்கம் கருதி, மத்திய அரசு, ஏப்., - ஜூனில், ஆழ்கடல் மீன்பிடிக்கு, தடைவிதிக்கிறது. தடைகால நிவாரணமாக, தலா, 5,000 ரூபாய் வழங்குகிறது.ஆழ்கடல் பகுதிக்கே தடைவிதிப்பு எனினும், இதை கரையோரம் மீன் பிடிப்போரும், கடைபிடிக்கின்றனர்.
எனவே, மீன்வளத் துறை, பயனாளிகளின், நிவாரணத் தொகையை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும்.பயனாளிகளின், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், துறை இணையத்தில் பதிவேற்றியுள்ள நிலையில், நடப்பாண்டு நிவாரணம் வழங்க, ஆவண சரிபார்ப்பு பரிசீலிக்கப்படுகிறது. இத்துறை, பயனாளி மொபைல் எண்ணிற்கு, இதுகுறித்து, தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X