சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'ரொம்ப மோசம்'

Added : மார் 24, 2020
Share
Advertisement
 'ரொம்ப மோசம்'

'ரொம்ப மோசம்'

'அரசியல் எதிரிகளை அவமதிப்பதற்கு ஒரு அளவு இருக்கிறது; அதை மீறி செயல்படலாமா' என, மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீலைப் பற்றி, சக அரசியல் கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வும், சிவசேனாவும் பல ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்தன. சமீபத்தில் தான், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இரு கட்சிகளும் பிரிந்தன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார்; இதை, மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம், சிவசேனா தலைவர்களை வாரி துாற்றுகின்றனர். மஹாராஷ்டிரா மாநில, பா.ஜ., தலைவரான சந்திரகாந்த் பாட்டீல், ஆராய்ச்சி குறித்த படிப்பை துவங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால், அதற்கு அவர் தேர்வு செய்துள்ள தலைப்பு தான், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'மக்கள் செல்வாக்குள்ள அரசியல் தலைவர் பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறேன். மஹாராஷ்டிராவில் அதற்கு பொருத்தமானவர், துணை முதல்வரும், தேசியவாத காங்., தலைவருமான அஜித் பவார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தாலும், நிழல் முதல்வராக செயல்படுவது அஜித் பவார் தான்' என, கூறியுள்ளார் அவர். சந்திரகாந்த் பாட்டீலின் இந்த அறிவிப்பு, சிவசேனா கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அவர் என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும்; எங்கள் தலைவரை எதற்கு அவமதிக்கிறார். இதெல்லாம், ரொம்ப மோசமான நடவடிக்கை' என, புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X