சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 24, 2020
Share
Advertisement
 'டவுட்' தனபாலு


செய்தித்துறை அமைச்சர், ராஜு: ஜெ.,யின் வேதா இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, விரைவில், ஜெ., வாழ்ந்த இடம், அங்கு உள்ள, 10 கிரவுண்ட் நிலம், அரசுடைமை ஆக்கப்படும்; நினைவு இல்லம் அமைக்கப்படும்.

'டவுட்' தனபாலு: ஜெயலலிதாவுக்கு பின் இறந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அருமையான நினைவிடத்தை, தி.மு.க., ஏற்படுத்தி விட்டது; அவர் நினைவாக பல சொற்பொழிவுகள், நிகழ்ச்சிகளையும் கூட, அக்கட்சி நடத்தி விட்டது. மூன்றாண்டுகளாக. ஜெ., நினைவிடம் கட்டும் பணியை இழுத்தடிப்பது போல, அவரது வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படுவதும் தாமதம் ஆகிறது. இந்த விவகாரத்தில், அ.தி.மு.க., அரசுக்கு ஆர்வம் இல்லையோ என்ற, 'டவுட்' இதனால் ஏற்படுகிறதே!

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக, சில மாநிலங்கள் அறிவித்திருப்பதை போல, தமிழக மக்களுக்கு, இலவச உணவு பொருட்கள் மற்றும் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும். அத்துடன், அனைத்து கடன் தவணைகளையும் அடுத்த, ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்; வட்டியை ரத்து செய்யும்படி, வங்கிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கை கொஞ்சம் நியாயமானது தான். இதன் மூலம், தமிழக மக்கள் மீது, உங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதற்காக, ஆறு மாதங்களுக்கு நிதியுதவி கோருவதும், வட்டியை ரத்து செய்ய கேட்பதும் சற்று, 'ஓவராக' இருக்கிறது என்ற எண்ணமும், மக்களுக்கு ஏற்படுகிறதே!


தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி: கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக, தமிழக சுகாதாரத் துறை போராடி வரும் நிலையில், கொரோனாஉற்பத்தி கூடமாக, டாஸ்மாக் கடைகள் விளங்குவதை, ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? நோய் தடுப்பில் உண்மையிலேயே, அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனே, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.

'டவுட்' தனபாலு: உண்மையிலேயே, டாஸ்மாக் கடைகளின் சுகாதார நிலை கேள்விக்குறியவை தான். மக்களின் அத்தியாவசியமான பொருளாக, மது பானங்கள் மாறி விட்டன என்பது போல, அரசு நினைக்கிறதோ என்ற, 'டவுட்' எழுகிறது. அதனால் தான், டாஸ்மாக் கடைகளை மூட, ரொம்பவும் யோசிக்கிறதோ... வருமானத்தை யோசிக்கும் அரசு, மக்களின் சுகாதாரத்தை எண்ணுவதில்லையோ!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X