சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

சி.ரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவின் பிரதமராக, 2014ல் பொறுப்பேற்று, ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார், மோடி.இதையடுத்து, 2019 பொதுத் தேர்தல் நேரத்தில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ள உள்ள திட்டங்களை, தேர்தல் அறிக்கையாக, பா.ஜ., வெளியிட்டது. அந்த தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற்று, பிரதமராக மீண்டும், மோடி பொறுப்பேற்றார்.மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், 'முத்தலாக், அயோத்தி ராமர் கோவில், ஜம்மு - காஷ்மீர் தனி அந்தஸ்து, குடியுரிமை திருத்த சட்டம்' போன்றவற்றை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது.'ஆட்சியில் அமர்ந்தால், என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவோம்' என, தேர்தலுக்கு முன், பா.ஜ., சார்பில், தெளிவான வாக்குறுதி, மக்களிடம் அளிக்கப்பட்டது. அவற்றை ஏற்ற மக்கள், பா.ஜ.,விற்கு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றியை அளித்தனர்.மேலும், பார்லிமென்டில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அவை அமலுக்கு வந்துள்ளன.இந்த நடைமுறைகள் அனைத்தையும், எதிர்க்கட்சிகள் மறைத்து, அரசியல் தகிடுதத்த நடவடிக்கைகளால், சாமானிய மக்களின் கவனத்தை திசை திருப்பி, போராட்டங்களை துாண்டி விடுகின்றனர்.அடிப்படைக் காரணங்கள் ஏதுமில்லாத, இந்தப் போராட்டங்களால், இந்த தேசத்தின் இறையாண்மைக்கும், பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு பராமரிக்கப்படுவதால், சிறுபான்மையினர் உட்பட, இந்திய குடிமக்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.அரசியல்வாதிகள், தங்கள் சுயநலத்திற்காக, போராட்டத்தை துாண்டி விடுகின்றனர் என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

'3 நாட்கள்' போலதனித்திருங்கள்!
பா.செண்பகவல்லி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆபத்தான நேரம் தான் இது. எப்படி என்றால், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளவில்லை எனில், உங்கள் உயிருக்கு ஆபத்து. 'கிருமி நாசினி' என்ற வார்த்தையை, தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை, குளியலறையில் உள்ள பொருட்கள், உடை, சோப்பு டப்பா, அடுப்பு, பாத்திரங்கள், பால் பாக்கெட், சமையலறை பொருட்கள், தரை, சோபா, நாற்காலி, புத்தகம், நாளிதழ், கணினி உபகரணங்கள் என அனைத்தையும், கிருமி நாசினியால், தினமும் இருமுறை, 'ஸ்பிரே' செய்து, பயன்படுத்துங்கள்.முகத்தில், 'மாஸ்க்' பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. கடைகளில் கிடைக்கவில்லை எனில், புடவை அல்லது வேட்டியை, இரண்டு, 'லேயர்'களாக சதுரமாகக் கிழித்து, குறுக்காக மடித்து, முகமூடியாகப் பயன்படுத்தலாம். இதையும், தினமும் இரு முறை மாற்ற வேண்டும். சோப்பு போட்டு நன்றாகத் துவைத்த பின், மீண்டும் பயன்படுத்த வேண்டும்.இனி சொல்லப் போவது, சிரிப்பாக இருந்தாலும், உண்மையில் இப்படி தான் இருக்க வேண்டும்.பெண்கள், 'அந்த மூன்று நாட்களில்' தனிமைப்படுத்தப்பட்டு வைப்பர். அவர்கள் பயன்படுத்திய பொருள் எதையும், வேறு யாரும் பயன்படுத்த மாட்டார். சுத்தப்படுத்தப்பட்ட பிறகே, மற்றவர் பயன்பாட்டுக்கு வரும். அப்படி தான், நீங்களும் தனிமையாக இருந்தாக வேண்டும்.எனவே, நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை, அதிரடியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றவற்றை, அலமாரியில், பீரோவில், 'ஷெல்ப்'களில் வைத்து, கிருமி நாசினி தெளித்து, 'சீல்' போட்டுவிடுங்கள். இரண்டு மாதங்களுக்கு, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.நீங்கள் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் உடைமைகளை, மேலே சொன்ன வகையில், அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டிலும், வெளியிலும், யார் மீதும் பட வேண்டாம்; 3 அடி தொலைவிலேயே இருங்கள்!சளியோ, இருமலோ ஏற்பட்டால், கண்டிப்பாக மருத்துவரைப் பார்ப்பதைத் தவிர, வேறு எந்த செயலும் முக்கியமல்ல. தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில், இப்படிச் செய்தால் மட்டுமே, உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.ஆபத்தை விரட்ட, எப்படி அசாத்திய தைரியமும், துணிச்சலும் வருமோ, அது போல, 'ஒத்தைக்கு ஒத்தை வரியா...' என்று சவால்விட்டு, வீறு கொண்டு எழுங்கள் மக்களே!

வக்கீல்களின்தொழில் தர்மம்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.'நிர்பயா' போன்ற பெண்களின் மரணத்துக்கு காரணமானோருக்கு, உடனடியாக துாக்கு தண்டனை வழங்க வேண்டும் அல்லது 'என்கவுன்டர்' செய்து, சுட்டு தள்ள வேண்டும் என்ற கோரிக்கை, முன் வைக்கப்படுகிறது.அதற்கு முக்கிய காரணம், நீதிமன்றங்களில், காலம் தாழ்த்தி கிடைக்கும், நீதியாகும்.அதனால் தான், வாசகர் ஒருவர், 'நிர்பயா குற்றவாளிகளை விடுதலை செய்து விடுங்களேன்' என, இப்பகுதியில் கடிதம் எழுதியிருந்தார்.கடிதம் வெளியான அன்று, அதிகாலையில், நான்கு பேரும் துாக்கிலிடப்பட்டனர். இதனால், பலரும் மகிழ்ச்சி அடைந்திருப்பர்.நிர்பயா குற்றவாளிகளுக்கு, தண்டனையில் இருந்து தப்பிக்க ஆலோசனை வழங்கிய, அவர்களுக்காக ஆஜராகிய வழக்கறிஞர்களுக்கு, துாக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான், அந்த வாசகர் சொல்லவில்லை.பல குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான், நம் சட்டத்தில் உள்ள தனிச் சிறப்பு. அதனால் தான், குற்றம் சாட்டப்பட்டோருக்கு, அத்தனை வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன.'எடுத்தோம்; கவிழ்த்தோம்' என, ஒருவரை விசாரணை செய்து, துாக்கில் ஏற்ற முடியாது.நம் பார்லிமென்ட் கட்டடத்தை குண்டு வைத்து தகர்க்க நினைத்த, அப்சல் குரு முதல், மும்பை துப்பாக்கி சூடு நடத்திய பைசல் வரை, அவர்களுக்காக வழக்கு நடத்த, வழக்கறிஞர் நியமனம் செய்து, சட்ட விதிமுறை பின்பற்றிய பின் தான், துாக்கு தண்டனை வழங்கப்பட்டது.வழக்கறிஞர்கள் அனைவரும், இது போன்ற வழக்குகளில், விரும்பி ஆஜராவதில்லை; தொழில் தர்மமாகத் தான் செய்கின்றனர்.நம் கல்வி முறையும், சமுதாயமும், தனி மனித ஒழுக்கத்தை எப்போது போதிக்கவில்லையோ, அப்போதே, இது போன்ற குற்றங்கள் பெருக துவங்கி விட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
26-மார்-202006:45:51 IST Report Abuse
venkat Iyer திரு.குணசேகரன் அவர்களே,பெண் வன்கொடுமைகளுக்கு ஆண் ஆதிக்க சமுகத்தினால்,ஆண் வக்கில்களால் கணக்கில் அடங்கா வாய்தா வாங்கப்பட்டு இன்று பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கிடைக்காமல் நெஞ்சுவலி யில் உயிர் இழந்து விட்டார்கள்.குறிப்பிட்ட ஒரு சமுகத்தில் படிப்பறிவில்லாத பெண் ஐந்து பெண்களை பெற்ற ஒரே காரணத்திற்காக ,அவருடைய சொத்துக்களை மைத்துனர் க்ளே ஆக்கிரமித்து 2014-ல் பிரச்சனை ஏற்பட்டதற்கு சிசி 181/2017-ல் சென்னை பூவிருந்தவல்லி குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கப்பட்ட நிலையில் ஆண்டுகள் இயக்கப்பட்டு சாட்சியங்களின் வீரியம் குறைக்கப்பட்டு பல வாய்தாக்களால் அலை கவனிக்கப்பட்டு வன் கொடுமைக்கு ஆளான பெண்மணி இன்று உயிர் இழந்த நிலையில்,இது போன்ற நீதிமன்றங்கள் பெண்களின் வன்கொடுமைகளுக்கு தீர்வு எதுவும் சிறப்பாக கொடுக்க போவது இல்லை.அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வீரியத்துடன் செயல்படுவதும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X