சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

பிரசாந்த் கிஷோர் மீது ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

Added : மார் 24, 2020
Share
Advertisement
 பிரசாந்த் கிஷோர் மீது ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

பிரசாந்த் கிஷோர் மீது ரஜினி ரசிகர்கள் கடுப்பு!
''மானியக் கோரிக்கையை பார்க்க வந்த கட்சிக்காரங்களை நல்லா, 'கவனிச்சு' அனுப்பியிருக்காருல்லா...'' என, பெஞ்ச் மீது அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த அமைச்சரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர்ல, போன வாரம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துச்சு... ''துறையின் அமைச்சரான ராஜு, மதுரைக்காரருங்கிறதால, அவரது சொந்த ஊருல இருந்து, ஏராளமான கட்சி நிர்வாகிகள், சட்டசபைக்கு போயிருந்தாவ வே...''எல்லாரும் பார்வை யாளர் மாடத்துல இருந்து, அமைச்சரின் பதிலுரையை ரசிச்சு கேட்டிருக்காவ... ''எல்லாரையும், அமைச்சர், சென்னையில தன் வீட்டுக்கு வரவழைச்சு, விருந்தெல்லாம் குடுத்து, வேட்டி, துண்டுன்னு பரிசுகளும் குடுத்து, ஊருக்கு வழியனுப்பியிருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.''மக்கள் போராட்டத்தால, தரமான சாலையை போட்டு குடுத்துட்டா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், குப்பண்ணா.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை, சோழவந்தான் பக்கத்துல, நெடுங்குளம் - திருவாலவாய நல்லுார் இடையே, நெடுஞ்சாலை துறை சார்புல போட்டிருந்த சாலை, தரமில்லாம மோசமா இருந்திருக்கு... ''அடுத்து, திருவால வாயநல்லுார் - நகரி இடையே தார்ச்சாலை அமைக்க, ஏற்பாடு பண்ணிண்டு இருந்தா ஓய்...''ஆனா, ஏற்கனவே தரமில்லாத சாலை போட்டதால, அந்த பகுதி மக்கள் கடுப்பாகி, புதிய சாலை போடக் கூடாதுன்னு போராட்டம் நடத்துனா... ''சோழவந்தான், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மாணிக்கம், சமரசம் பேசி, 'இங்க தரமான சாலை அமைக்கப்படும்... அதை, கிராம மக்கள், 'பொக்லைன்' மூலம் தோண்டி பார்க்கலாம்... அந்த செலவை, நானே ஏத்துக்கறேன்'னு வாக்குறுதி குடுத்தார்... ''அப்பறமா தான், அங்க தரமான சாலையை போட்டு குடுத்திருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''பிரசாந்த் கிஷோர் மேல கடுப்புல இருக்காங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து குடுக்கிறவர் தானே, அவர்... அவர் மேல யாருக்கு, என்னங்க கோபம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கொரோனா தடுப்பு நடவடிக்கையா, நாடு முழுக்க, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கணும்னு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தாருல்ல... இது சம்பந்தமா, 'டுவிட்டர்' பதிவுல ரஜினி டெக்னிக்கலா சில கருத்துகளை பதிவிட்டாரு பா...''ஆனா, அது தப்புன்னு, டுவிட்டர் நிர்வாகத்துக்கு, பிரசாந்த் கிஷோர் புகார் தெரிவிச்சிட்டார்... உடனே, ரஜினி பதிவை, டுவிட்டர் நீக்கிடுச்சு... ''இதனால, ரஜினி ரசிகர்கள் எல்லாம், பிரசாந்த் கிஷோரை, 'போலி நடுநிலையாளர்'னு, சமூக வலைதளத்துல விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X