பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 24, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

மார்ச் 25, 1927: ப.சண்முகம்.
காரைக்காலை ஒட்டிய, நெடுங்காடு கிராமத்தில் பிறந்தவர், ப.சண்முகம். முன்னாள் பிரதமர், நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவரான இருந்தாலும், அந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளாமல், எளிமையாக வாழ்ந்தார். காமராஜர் வழியில், திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்க்கையை, பொதுப்பணிக்கு அர்ப்பணித்தார்.புதுச்சேரி மக்கள் பிரதிநிதித்துவ சபைக்கு, இரண்டு முறையும், சட்டசபைக்கு, மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.கடந்த, 2000, 2001ம் ஆண்டுகளில், இரண்டு முறை, புதுச்சேரி முதல்வராக பதவி வகித்துள்ளார். இரு முறை, மேயராக பதவி வகித்துள்ளார். மூன்று முறை, லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுச்சேரி காங்., தலைவராக, 22 ஆண்டுகள் பணியாற்றினார்.வயது மூப்பு காரணமாக, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து, சொந்த ஊரில், விவசாயம் செய்து வந்தார். 2013 பிப்., 1ம் தேதி, படியில் தவறி விழுந்து, தலையில் காயமடைந்து, உயிரிழந்தார்.எளிமையான அரசியல்வாதியான, ப.சண்முகம் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X