சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவிலில், புதிய சிலை செய்ததில், தங்கம் முறைகேடு தொடர்பாக, செயல் அலுவலர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சிதிலமடைந்ததாக கூறி, 2015ல், புதிய சிலை செய்யப்பட்டது.புதிய சிலை செய்வதற்கு, நன்கொடையாளர்கள் தங்கம், வெள்ளி வழங்கியதாக கூறப்பட்டது.ஆனால், அந்த சிலையில், போதிய தங்கம்சேர்க்கப்படவில்லை என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிமன்ற விசாரணைக்குபின், சிலை தொடர்பாக, செயல் அலுவலர், கோவில் ஸ்தானிகர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும், நீதிமன்ற உத்தரவுபடி, பழைய சோமாஸ்கந்தர் சிலையை புதுப்பித்து, கடந்த ஆண்டு உற்சவத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
இதையடுத்து, வேலுார் அறநிலையத் துறை இணை ஆணையர், புதிய சிலை செய்த முறைகேடு குறித்து, கடந்த மாதம் விசாரணை செய்தார்.இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலரான முருகேசன், வரும், 31ம் தேதி, பணி ஓய்வு பெறும் நிலையில், நேற்று, அறநிலையத் துறை ஆணையரால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.அவருக்கு பதில், செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஏகாம்பரர் கோவிலை, கூடுதலாக கவனிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X