பொது செய்தி

தமிழ்நாடு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை செங்கையில் 40 குழு அமைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு:கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு, ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா, சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் உட்பட, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், கலெக்டர் ஜான்லுாயிஸ் பேசியதாவது:மாவட்டத்தில், குறுவட்ட அளவில், வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம்மற்றும் காவல் துறை உறுப்பினர்கள் அடங்கிய, 40 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இக்குழுவினர், வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பி, கண்காணிப்பில் உள்ள, 193 பேர் மற்றும் அவரை சார்ந்த மற்றவர்களின் உடல்நிலை குறித்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.சுகாதாரத் துறை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலயர்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று, விபரங்களை கேட்டறிந்து, கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.வருவாய் துறை அலுவலர்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீட்டின் வெளிச்சுவரில், தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீடு என, 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும்.காவல் துறையினர், தனிமைப்படுத்தப்பட்ட நபர், வெளியே செல்லாமல், தனித்துதான் இருக்கிறாரா என, உறுதி செய்ய வேண்டும். அனைத்து களப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து, இப்பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.24 மணி நேர கட்டுப்பாட்டு அறைஇலவச, 'டோல் பிரீ' எண்: 1800 1205 55550தொலைபேசி எண்கள்: 044- - 2742 7414, 2951 0400, 2951 0500, 2430 0300மொபைல் எண்கள்: 79049 86133, 98943 77189

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X