பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை உயர்ந்தது

Added : மார் 24, 2020
Share
Advertisement
 காய்கறி விலை உயர்ந்தது

மாமல்லபுரம்:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில், நேற்று துவங்கி, 31ம் தேதி வரை, தமிழக அரசு, ஊரடங்கிற்கு அறிவித்துள்ளது.அதனால், பொருட்கள் கிடைப்பதில், சிக்கல் ஏற்படலாம் என கருதி, நேற்று, மார்க்கெட் பகுதி கடைகளுக்கு வந்து, பொதுமக்கள் அலைமோதினர்.மாமல்லபுரம், புதுப்பட்டினம், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், காய்கறிகள், மளிகை பொருட்கள், வழக்கமான விலையைவிட, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.
திட்ட இயக்குனர்கிராமத்தில் ஆய்வு
ஊத்துக்காடு:வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு மற்றும் தென்னேரி கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், நேற்று, ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, வாலாஜாபாத் பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், முத்துசுந்தரம் ஆகியோர், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X