பொது செய்தி

தமிழ்நாடு

அதிருப்தி! அண்டை மாநில போலீசாரின் கெடுபிடியால்... தமிழக எல்லைக்குள் உள்ளூர்வாசிகள் தவிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020
Share
Advertisement
அதிருப்தி!  அண்டை மாநில போலீசாரின் கெடுபிடியால்...  தமிழக எல்லைக்குள் உள்ளூர்வாசிகள் தவிப்பு

- நமது நிருபர் -தமிழக பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதியில், ஆந்திர போலீசார் தடுப்பு அமைத்து, தமிழக வாகனங்களை அனுமதிக்க மறுப்பதால், உள்ளூர்வாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய தமிழக பகுதிக்கு இடையே, பனங்காடு, ராமபுரம், பெரியவேடு ஆகிய ஆந்திர மாநில எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன.
நோய் தொற்று தடுப்பு
ஆரம்பாக்கம், நொசிக்குப்பம், தோக்கமூர், பூவலை, நாயுடுகுப்பம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க, இருசக்கர வாகனம், கார் மூலம், தினசரி, கும்மிடிப்பூண்டி வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, இரு மாநில எல்லைகள் மூடப்பட்டன.தமிழக பகுதிக்கு இடையே உள்ள பனங்காடு பகுதியில், ஆந்திர போலீசார், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து, தமிழக பதிவு எண் வாகனங்களை, ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.

இந்த கெடுபிடியில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் உள்ளூர்வாசிகளும் தடுக்கப்படுவதால், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஆகையால், பனங்காடு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்றி, ஆரம்பாக்கம் அடுத்துள்ள ஆந்திர பகுதியான தடாவில், ஆந்திர போலீசார் தடுப்பு அமைக்க வேண்டும் என, உள்ளூர் மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இப்பிரச்னைக்கு, கும்மிடிப்பூண்டி தாசில்தார், டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.அதேபோல், தமிழக- - ஆந்திர மாநில எல்லையான, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், இரு நாட்களாகவே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை தடுப்பதற்காக, சாலையின் குறுக்கே, போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்.
கிருமிநாசினி

இதனால், பொன்பாடி சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த லாரிகள், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.திருத்தணி டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், 24 மணி நேரமும் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து கண்காணித்து வருகின்றனர். சோதனைச்சாவடியில், சுகாதார துறையினர் முகாமிட்டு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்தி, கிருமிநாசினி தெளித்தும், அதில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என, பரிசோதனை செய்த பின்னரே தமிழகத்திற்கு உள்ளே வர அனுமதிக்கின்றனர்.

ஆந்திராவில் இருந்து வருவோருக்கு பரிசோதனை

ஊத்துக்கோட்டையில் இருந்து, இரண்டு சாலைகள் ஆந்திர மாநிலத்தை இணைக்கின்றன. திருப்பதி, சத்தியவேடு ஆகிய இரண்டு சாலைகளில், தமிழக அரசு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, ஆந்திராவில் இருந்து வரும் பொதுமக்களை பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.நேற்று காலை, சப்- - கலெக்டர் வித்யா, சத்தியவேடு சாலையில் உள்ள முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:ஆந்திராவில் இருந்து வரும் ஒவ்வொருவரும், பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சந்தேகபடும்படி யாராவது கண்டறியப்பட்டால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X