பொது செய்தி

இந்தியா

21 நாள் ஊரடங்கு! நேற்று நள்ளிரவு 12:00 முதல் நாடு முழுதும் அமல்

Updated : மார் 25, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (12+ 366)
Share
Advertisement
21daysLockdown,CurfewInIndia,lockdownindia,StayHomeIndia,For21,PM,Modi,பிரதமர்,மோடி,21நாள்,ஊரடங்கு

புதுடில்லி: 'கொரோனா' பெருந்தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, அதாவது, ஏப்., 14 இரவு வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ''வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்,'' என, பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம், நேற்று, 'டிவி' மற்றும் வானொலி வாயிலாக பேசினார்.

அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக, கடந்த, 22ம் தேதி, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட்டது. இதில், நாடு முழுதும், குழந்தைகள், பெரியவர்கள், பணக்காரர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் என, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று, மக்கள் ஊரடங்கை வெற்றிகரமாக்கி னோம். இதற்காக, நான், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மூன்று வாரம் இந்தியாவை இயங்காமல் நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'கொரோனாவுக்கு, முதல், 67 நாட்களில், ஒரு லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். 'அடுத்த, 11 நாட்களில் இது, இரண்டு லட்சமாக உயர்ந்தது. தொடர்ந்து, நான்கு நாட்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்ந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரே வழி தான் உள்ளது


'இந்த தொற்று பரவலைத் தடுப்பதற்கு, ஒரே ஒரு வழி தான் உள்ளது' என, டாக்டர்கள், விஞ்ஞானிகள், சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அது, தனிமைப்படுத்திக் கொள்வதை யும், சமூக விலக்கலையும், மக்கள் கடைப்பிடிப்பது மட்டும் தான்.கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என, ஒரு போதும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இது குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஏன், என் வரை, பரவும் அபாயம் உள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ஆனால், இவை போதாது. அதனால், மிக முக்கியமான முடிவை நாம் எடுக்க உள்ளோம். இன்று நள்ளிரவு, 12:00 மணி முதல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த, 21 நாட்களுக்கு, இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.இந்த நாட்களில், மக்கள் யாரும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பினரும், 21 நாட்கள், வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்தாலும், கொரோனா, உங்கள் வீட்டில் அடி எடுத்து வைக்கிறது என, அர்த்தம்.

நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பது, உங்களை மட்டுமின்றி, உங்கள் வாரிசுகளை, குடும்பத்தி னரை, நண்பர்களை, அண்டை வீட்டினரை, நாட்டு மக்களை, கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றும். இது, நீங்கள் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கை.


'லட்சுமண கோடு' தாண்டாதீர்கள்'


அடுத்த, 21 நாட்கள், வீட்டுக்குள்ளேயே இருப்போம்' என, உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த, 'லட்சுமண கோட்டை'த் தாண்ட மாட்டோம் என, உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த, 21 நாள் ஊரடங்கால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும்; பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். ஆனால், அதை விட எனக்கு, என் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் உயிர் தான் முக்கியம். இந்த கொரோனாவுக்கு யாரும் பலியாகி விடக் கூடாது என்பதில், நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த, 21 நாள், சமூக விலக்கலை நாம் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியும் என, சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதை நாம் கடைப்பிடிக்கா விட்டால், அதன்பின், கொரோனா பரவல், சமூக பரவலாக மாறிவிடும். மக்களை காப்பாற்றுவது, எளிதான காரியமல்ல. நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட, நாம் அனுமதித்துவிடக் கூடாது.

இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல நாடுகளும், கொரோனாவால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள், மருத்துவத் துறையில் மிகவும் முன்னேறிய நாடுக ளாக கருதப்படுகின்றன. ஆனால், அந்த நாடுகளால் கூட, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியவில்லை. சமூக விலக்கல் மூலமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என முடிவெடுத்து, அந்நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.


சேவைக்காக பிரார்த்தனை


இந்த நேரத்தில், நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொரோனா பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற, தங்கள் குடும்பத்தினரை மறந்து, 24 மணி நேரமும் பணியாற்றும், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக, நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.நமக்கு, கொரோனா உட்பட அனைத்து தகவல்களையும் தருவதற்காக, 24 மணி நேரமும், குடும்பத்தினரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றும் ஊடகத் துறையினருக்காக, பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அடுத்தது, போலீசார்; இவர்கள், 24 மணி நேரமும், நம் பாதுகாப்புக்காக பணியாற்றுகின்றனர். சில நேரங்களில், இவர்கள் மீது மக்கள் கோபமடைந்து, சண்டை போடுகின்றனர். ஆனால், நம் பாதுகாப்புக்காகவே அவர்கள் பணியாற்றுகின்றனர் என்பதை நினைத்து, நாம் பிரார்த்தனை செய்வோம்.


வீட்டிற்குள்ளேயே இருங்கள்

இந்த, 21 நாள் ஊரடங்கில், அத்தியாவசியப் பொருட்களுக்கு, எந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்க, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதனால், மக்கள் கவலைப்படாமல், வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.இந்த, 21 நாட்கள், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை, நடவடிக்கைளை, கட்டுப்பாட்டுடன் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், கொரோனாவை நம்மால் நிச்சயம் வெல்ல முடியும்.

கொரோனா பரவலை தடுக்க, சுகாதாரத் துறை கட்டமைப்பை மேம்படுத்த, 15 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கப்படும். மக்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும்.


சுயமாக மருந்து சாப்பிடாதீர்கள்


இந்த நேரத்தில், நான் மீண்டும் உங்களை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்று இருப்பது தெரிந்தால், நீங்களாக எந்த மருத்தையும் சாப்பிடக் கூடாது. டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில், அது பெரும் ஆபத்தாக முடியும். வாழ்வதற்கு, உயிர் மிகவும் முக்கியம்; இதை நாம் மறந்து விடக் கூடாது.கொரோனா என்றால், யாரும் சாலைக்கு வரக்கூடாது என்று அர்த்தம்.

கொரோனா பரவல் தொடர்பாக, பல்வேறு வதந்திகள், மூடநம்பிக்கைகளை, சமூக வலை தளங்களில் பரப்புகின்றனர். இவற்றை, மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறேன்.கொரோனா பரவலை இந்தியா எப்படி தடுக்கிறது என்பதை, நம் செயல்கள் முடிவு செய்யப் போகின்றன. சுகாதாரத் துறை சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.கொரோனா தொற்று நோய் சவாலை, 21 நாள் ஊரடங்கு மூலம் நாம் வெற்றிகரமாக முறியடிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12+ 366)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-202017:27:25 IST Report Abuse
ஆப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனாவின் பலி அதிகமாயிருக்கும். பல ஆயிரங்களை தாண்டிய பின், the corona crisis will blow over. இப்பவே வடக்கே போலீஸ் மக்களை வெளியே வந்தால் அடித்துத் துன்புறுத்துவதாக படங்களும், வீடியோக்களும் வெளிவருகின்றன. இது இன்னும் அதிகமாகி போலீஸ், மக்களுக்கிடையே மோதல் அதிகமாகும். கருத்தைச் சொன்னா சொம்படி வருது. என்ன செய்ய?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
25-மார்-202016:59:16 IST Report Abuse
தமிழ் வேந்தன் காஷ்மீரிகள் நம்மை பார்த்து சிரிப்பது போல் தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
25-மார்-202011:45:18 IST Report Abuse
Suri பரட்டை என்கிற வட்டிகாந்திடம் இருந்து இன்று ஒரு வீடியோ இல்லை அறிக்கை வருமா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X