சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., கடைகள் வணிக வளாகங்கள் மூட உத்தரவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

நெய்வேலி : நெய்வேலி நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஏதுவாக வர்த்தகர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி என்.எல்.சி.,நகர நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, நேற்று முதல் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் உணவகங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.ஆனால், இந்த கடைகளும் மாலை 4 மணிக்குள் மூடப்பட வேண்டும், டீ கடைகள்,சாலையோர கடைகள் மற்றும் தள்ளு வண்டி உணவகங்கள் முழுமையாக மூடப்படுகிறது.

உணவகங்களில் உணவு பரிமாற அனுமதியில்லை. பார்சல்கள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். வாரச்சந்தைகள் மற்றும் சம்பள நாள் ( பே - டே ) பஜார் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கண்ட விதிகளை மீறும் வர்த்தகர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது அபராதம் விதிப்பதோடு கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் என்.எல்.சி., நகர நிர்வாகத்தின் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X