கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த கடலுார் எம்.பி., ரமேஷ் அறிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த கடலுார் எம்.பி., ரமேஷ் அறிக்கை

Added : மார் 24, 2020
Share
பண்ருட்டி : கொரோனா வைரஸ் தங்களை தாக்காது என்கிற மனநிலையை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கடலுார் எம்.பி., ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:கடலுார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பலர் தனிமைபடுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா

பண்ருட்டி : கொரோனா வைரஸ் தங்களை தாக்காது என்கிற மனநிலையை பொதுமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என கடலுார் எம்.பி., ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:கடலுார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பலர் தனிமைபடுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் கொரோனா வைரஸ் தங்களை தாக்காது என்கிற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு யாரும் வெளியில் வராமல் குடும்பத்துடன் சுகாதாரத்தை விழிப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X