பொது செய்தி

தமிழ்நாடு

பெண்கள் வாய்ப்பை உருவாக்க வேண்டும்! சொல்கிறார் பேப்பர் பேஜ்.இன் கிருத்திகா

Added : மார் 24, 2020
Share
Advertisement
 பெண்கள் வாய்ப்பை  உருவாக்க வேண்டும்!   சொல்கிறார் பேப்பர் பேஜ்.இன் கிருத்திகா


கத்தி போல், சமூக வலைதளங்கள், ஆக்கவும், அழிக்கவும் பயன்பட்டு வருகின்றன. 'டுவிட்டர், பேஸ்புக்' ஆகியவற்றுக்கு போட்டியாக, சென்னை பெண் கிருத்திகா, 33, என்பவர் ஆரம்பித்த சமூக வலைதள பக்கத்திற்கு, மெல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ''வீட்டிலேயே முடங்காமல், இல்லத்தரசிகள், அவரவர் திறமைக்கு ஏற்ப வாய்ப்பை உருவாக்கி பயன்படுத்த வேண்டும்,'' என்கிறார் இவர்.
அவருடன் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி?
சென்னை, நங்கநல்லுாரில், குடும்பத்துடன் வசிக்கிறேன். எம்.காம்., - எம்.பில்., முடித்து, கல்லுாரி பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். திருமணமாகி இல்லத்தரசியாக மாறிய பின், நான் ஆரம்பித்த, 'பேப்பர் பேஜ்.இன்' வலைதளத்தை, கவனித்து வருகிறேன்.
அதென்ன பேப்பர் பேஜ்?
என் கணவர், புத்தகத்தை பி.டி.எப்., வடிவில் மாற்றி, அதை இணையதளத்தில் பதிவேற்றி, வாசகர்கள் இலவசமாக படிக்கும் வகையில், ஒரு தளத்தை உருவாக்கினார். அதில், சில மாற்றங்களை செய்யலாமே என யோசித்தேன். குறிப்பாக, இல்லத்தரசிகளாக உள்ள பெண்களுக்கு உபயோகப்படும் வகையில், இணையதளத்தை மாற்ற நினைத்தேன். அதன் தொடர்ச்சியாக, paperpage.in என்ற தளத்தை உருவாக்கி, அதை டுவிட்டர், பேஸ்புக் போல் மாற்றினேன். தளத்தை உருவாக்கி, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. படிப்படியாக மாற்றங்களை உருவாக்கி வருகிறேன்.
ஏற்கனவே, 1,000 வலைதளங்கள் இருக்க, இதனால் என்ன பயன்?
டுவிட்டர், பேஸ்புக் போன்ற தளங்களில் இல்லாத, பல வசதிகள் இதில் உள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. பெண்கள், அவர்கள் தயாரிக்கும் நகை, சேலை உள்ளிட்ட அவர்களின் தொழிலை, இதன் மூலம் விரிவுப்படுத்தலாம். பெரிய கோப்புகளை பரிமாற்றம் செய்யவும், தேவையான தகவல்களை சேமித்து வைக்கவும், இதில் வசதிகள் உள்ளன. மெசஞ்ஜர், வீடியோ கால் வசதி, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல வசதிகளை, இதில் கொண்டு வர உள்ளோம். வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும், இதில் அதிகம் பகிரப்படுகின்றன. பேஸ்புக், டுவிட்டர் கணக்கு வாயிலாகவும், பேப்பர்பேஜ் தளத்தை உபயோகப்படுத்தலாம்.
சமூக வலைதளங்களில், 'அந்த' மாதிரியான விஷயங்கள் அதிகம் பகிரப்படுமே... அதை எப்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறீர்கள்?
அந்த மாதிரி எந்த விஷயமும், பேப்பர் பேஜ் தளத்தில் பகிர முடியாது. அதை, ஆரம்பத்திலேயே தடுத்து விடுவோம். மீறி வந்தாலும், அடுத்த சில நிமிடத்தில் கண்காணித்து அகற்றி விடுவோம்.
எவ்வளவு பேர் உங்கள் தளத்தை பயன்படுத்துகின்றனர்?
உலகெங்கும் இதுவரை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். பயனுள்ள தகவல்கள் மட்டுமே இடம் பெறுவதும், இல்லத்தரசிகளிடையே எங்கள் தளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துஉள்ளது.
இல்லத்தரசிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நாம் படித்த படிப்புக்கு ஏற்ற மாதிரி தான் வேலை செய்ய வேண்டும் என நினைக்காமல், வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், கவலைப்படுவதை விட்டு, நமக்குள் உள்ள திறமையை வெளியே கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X