பொது செய்தி

தமிழ்நாடு

சுங்க கட்டணம் இல்லை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Added : மார் 24, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் நிர்வாகம் சுங்க கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் செல்ல அனுமதித்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழக அரசு நேற்று மாலை 6:00 மணி முதல் 144 உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், சென்னையில் தங்கியிருப்போர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக நேற்று முன்தினம் முதல் வாகனங்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. தகவலறிந்து டி.எஸ்.பி., விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.

நேற்று காலையும் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் காலை 9:30 மணி முதல் டோல்கேட் நிர்வாகம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக செல்ல அனுமதித்தன. அதனைத் தொடர்ந்து வாகனங்கள் தடையின்றி சென்றதால் போக்குவரத்து சீரானது. அதன் பின்னர் டோல்கேட் நிர்வாகம் சுங்கக் கட்டணம் ஏதும் வசூலிக்காததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X