பொது செய்தி

தமிழ்நாடு

ஒத்துழைக்காத குடிநீர் வாரியம்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 ஒத்துழைக்காத குடிநீர் வாரியம்

சென்னை:'வேளச்சேரி இரண்டடுக்கு மேம்பால பணியை விரைந்து முடிக்க, குடிநீர் வாரியம் ஒத்துழைக்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேளச்சேரியில் ஏற்படும் கடுமையான நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 108 கோடி ரூபாயில், இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்து, 2016 பிப்ரவரியில் பணி துவங்கியது.சென்னையில், முதன்முறையாக கட்டப்படும் இரண்டடுக்கு மேம்பாலம் இது தான். தரமணி சாலையில் இருந்து, 100 அடி சாலை வரை, 36 துாண்கள் அமைத்து, பாலம் கட்டப்படுகின்றது. இதன் மைய பகுதி, 50 அடி உயரம் உள்ளது.அதேபோல், 100 அடி சாலையில் இருந்து, தாம்பரம் சாலை வரை, 17 துாண்கள் அமைத்து, பாலம் கட்டப்படுகிறது. இதன் மைய பகுதி, 25 அடி உயரம் கொண்டது. தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளன.நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், மேம்பால மைய பகுதியில், துாண்கள் அமைக்க முடியாத சூழல் உள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க, முடிவு செய்யப்பட்டது.மேம்பால பணி நடக்கும் நுாறடி சாலையில், பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் செல்லும் பெரிய கழிவு நீர் குழாய் உள்ளது. இதில், அடைப்பு எடுக்கும் துளை, 20 அடி ஆழத்தில் உள்ளது.
இதை, சாலை மட்டத்தில் உயர்த்தினால் மட்டுமே, மேம்பால பணியை தொடர முடியும். மூன்று துளைகளை சாலை மட்டத்தில் உயர்த்த, 20 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.ஆனால், குடிநீர் வாரியம் ஒத்துழைப்பு வழங்காததால், துளைகளை சாலை மட்டத்தில் உயர்த்த வேண்டிய பணி, ஆறு மாதமாக இழுபறியில் செல்கிறது.இதனால், மேம்பால பணிகளை கிடப்பில் போடும் சூழல் ஏற்பட்டு உள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, கழிவு நீர் குழாய் துளைகளை, சாலை மட்டத்தில் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X