பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை,இளையான்குடியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 மானாமதுரை,இளையான்குடியில்  பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

மானாமதுரை : மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் 144 தடை உத்தரவை முன்னிட்டு ஏராளமான கிராம மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க கடைகளில் குவிந்தனர்.

தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் நேற்று மாலை 6:00 மணி முதல் நாடெங்கும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.இருந்தாலும் அத்தியாவசிய பொருள்களான மளிகை,காய்கறி,பால்,இறைச்சி கடைகள் திறந்திருக்கும் என அறிவித்துள்ளது.

மானாமதுரை மற்றும் இளையான்குடி அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளதால் அங்கிருந்து போக்குவரத்து வசதி இல்லாததால் நேற்றே அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கடைகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.காய்கறி போதுமான வரத்து இல்லாததால் வெங்காயம்,தக்காளி,கத்தரிக்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.

மானாமதுரை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் கூறுகையில், மானாமதுரை பகுதியில் கூட்டம்,கூட்டமாக மக்கள் சேர்ந்து வரக்கூடாது,அத்தியாவசிய பொருள்கள், மருத்துவமனைகள், மற்றும் முக்கியமான பணிகளுக்கு செல்வோர் மட்டுமே வீட்டை வெளியே வர வேண்டும்,மேலும் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X