சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூரில் 5 பேருக்கு சீல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்புத்துார்: திருப்புத்துாருக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேரின் கையில் சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 51 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையினர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

திருப்புத்துார் நகரில் தென்மாப்பட்டு, காந்திநகர், கான்பா நகர் பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்கு மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ், வட்டார மேற்பார்வையாளர் தீனதயாளன் ஆகியோர் கொண்ட சுகாதாரக் குழுவினர் சோதனை மேற்கொண்ட போது பாதிப்பில்லாதது தெரிந்தது. இருப்பினும் அவர்களை 30 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.

மேலும் அவர்கள் கையில் சீல் வைக்கப்பட்டது.இது போன்று கிராமங்களிலும் சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கேரள எல்லையிலிருந்து வந்த காரையூர் அகதிகள் முகாமிலிருந்த வாலிபர் ஒருவரையும் மருத்துவ சோதனை நடத்தி தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் ஊர்குளத்தான்பட்டி, மணமேல்பட்டி, கண்டவராயன்பட்டி, பூலாங்குறிச்சி, ஆவினிப்பட்டி, நாகப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்த 51 பேர் வீட்டில் 30 நாட்கள் வரை தனிமைப்படுத்த அறிவுறுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

நேற்று தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வெளி மாவட்டம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வி.ஏ.,ஓ., ஆர்.ஐ., உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வின் போது நடவடிக்கை எடுக்க காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X