ரத்த அழுத்த மருந்துகளால் 'கொரோனா' பாதிப்பு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வாஷிங்டன்,உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளால் அவதிபடும் நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் 'கொரோனா' பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

மொத்தம் 3.84 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.சர்வதேச நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த கொரோனா இளம் வயதினரை காட்டிலும் முதியவர்களையே அதிகமாக பாதிக்கிறது. இந்நிலையில் இதுகுறித்த அறிவியல் விளக்கத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வறிக்கை 'ஜர்னல் ஆப் ட்ராவல் மெடிசன்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழக பேராசிரியர் கேம்ஸ் டியாஸ் கூறியதாவது:மாரடைப்பு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நீண்டகால சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிபடும் நோயாளிகளுக்கு ஏ.சி.இ.ஐ. எனப்படும் ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் -இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் ஏ.ஆர்.பி. எனப்படும் ஆஞ்சியோடென்சின் ரிசெப்டர் பிளாக்கர்ஸ் ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த நோய்களால் அவதிபடுவோரில் பெரும்பாலானோர் முதியோர்கள் தான். அவர்கள் இந்த மருந்துகளை தினமும் எடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக அவர்களின் இதயம் மற்றும் நுரையீரலுக்கு இடையிலான ரத்த ஓட்டத்தில் ஏ.சி.சி.- 2 எனப்படும் ஆஞ்சியோடென்சின் கன்வர்டிங் என்சைம் - -2 ரிசெப்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரிசெப்டர்களை கொரோனா வைரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மனிதர்களை பாதிக்கிறது.சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1099 நோயாளிகளின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக நோய் இதய கோளாறு நீரிழிவு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஏ.சி.இ.ஐ. மற்றும் ஏ.ஆர்.பி. மருந்துகளை எடுத்துக்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வைரஸ் எளிதாக பாதிக்க வழிவகுக்கும் இந்த மருந்துகளை எடுத்துவரும் நோயாளிகள் அதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் யாரும் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X