உலகம் செய்திகள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வீடு தேடி வரும் கார்

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவில் கார் போன்ற வாகனங்களின் விற்பனை மந்தமாகவே உள்ளது. ஷோரூம் சென்று வாங்கினால் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.இந்த நிலையில் 'கீலி ஆட்டோ' என்ற நிறுவனம் புதிய யுக்தியை கடைப்பிடித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே 'ஆன்லைன்' மூலமாக காருக்கு முன்பதிவு செய்யலாம். பணத்தையும் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும்.
கார் வீட்டிக்கு வந்து சேரும். முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பயன்படுத்த உகந்தது என்ற சான்றிதழும் ஆன்லைனில் வழங்கப்படும். சரி கார் சாவியை பெறும்போது ஊழியருடன் பேச வேண்டியிருக்குமே என்ற அச்சம் எழுந்தது.'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் கார் சாவி ஒப்படைக்கும் புதிய யுக்தியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. கடந்த மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தின் புதிய காரை வாங்கியுள்ளனர். மேலும் 11 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

உதவுவதற்கு சீனா தயார்

வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பது குறித்து 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களூடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் விவாதித்தார். அதைத் தொடர்ந்து இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகள் மருத்துவ நிபுணர்கள் இடையேயான ஆலோசனையும் சமீபத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது.அப்போது சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து சீனா அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் உதவத் தயராக உள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

தகவல் பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐ.நா.வின் சர்வதேச தொலைத் தொடர்பு சங்கம் புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் அனைவருக்கும் தகவல் தொடர்பு வசதி கிடைப்பதை உறுதி செய்ய இந்த தளம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையேற்றம் நிறுத்தம்

நம் அண்டை நாடான நேபாளத்தில் ஷெர்பா எனப்படும் மலையேற்றத்துக்கு உதவும் வழிகாட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தப்பவில்லை. இதையடுத்து 29 ஆயிரத்து035 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்துக்கு சாகச பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனால் பயண வழிகாட்டிகளான ஷெர்பாக்கள் வேலை இல்லாமல்திணறுகின்றனர். இதுவரை 21 முறை சிகரத்தை எட்டியுள்ள அபா ஷெர்பா உள்ளிட்டோர் எப்போது வைரஸ் பாதிப்பு நிற்கும் என காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X