சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டுகள் திருத்தம் அலைக்கழிக்கப்படும் மக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ரேஷன் கார்டில், திருத்தங்கள் கோரி, விண்ணப்பிக்கப்படும் மனுக்களை, விசாரணை இன்றி, உணவு வழங்கல் அதிகாரிகள், நிராகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

புறநகரில் உள்ள குரோம்பேட்டை, சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், திருமலை நகர் பகுதிகளில், லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது, முகவரி மாற்றம் செய்வது போன்ற, திருத்தங்கள் கோரி, ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.

பொதுவாக, திருத்தங்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை, சம்பந்தப்பட்ட மண்டல உணவு வழங்கல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், பரங்கிமலை மண்டல, உணவு வழங்கல் துறை அதிகாரிகள், ஆய்வு செய்யாமலேயே நிராகரிக்கின்றனர்.இவ்வாறு, மூன்று மாதங்களில், 5,000க்கும் மேற்பட்ட மனுக்கள்,அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மண்டல அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.ஆன்லைனில் ஒருமுறை, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, 300 முதல், 500 ரூபாய் வரை, 'நெட் சென்டர்'களில், பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்த வகையில், ஒரு சிலருக்கு, 10 முறைக்கும் மேல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், அவர்களுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கட்டணமே, 3,000 முதல், 5,000 ரூபாய்க்கும்மேலாகிறது.இதேநிலை தான், சர்க்கரை கார்டு வைத்திருப்போருக்கும் உள்ளது. அந்த கார்டு வைத்திருப்போரின் குடும்பத் தலைவருக்கு, எதிர்பாராத விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கிறது.

அப்போது, குடும்பத்தலைவி வருமானம் இன்றி, சர்க்கரை கார்டுகளை, அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பிக்கிறார். அந்த விண்ணப்பங்களின் உண்மை தன்மையையும், ஆராயாமலேயே அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.இதனால், புறநகரில் கணவனை இழந்து, வருமானம் இன்றி சிரமப்படும், பல குடும்பத்தினர்,ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அரசு தலையிட்டு, இப்பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.-மு.சாத்தையா, 41,சமூக ஆர்வலர்,செம்பாக்கம்
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X