பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவு எதிரொலி சிவகங்கை மாவட்ட எல்லைகள் மூடல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

மானாமதுரை : கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மானாமதுரை அருகே சிவகங்கை மாவட்ட எல்லை பகுதி நேற்று மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டு 144 தடை உத்தரவையும் நேற்று மாலை 6:00 மணி முதல் அமல்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் தெற்கு பகுதி எல்லையான எம்.கரிசல்குளத்தில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,ரோஹித்நாதன், மானாமதுரை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ராமநாதபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

பிற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.சோதனை சாவடியில் ஒரு எஸ்.ஐ.,மற்றும் 4 போலீசார் மார்ச் 31 ந்தேதி வரை சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாக மானாமதுரை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தெரிவித்தார்.சிங்கம்புணரி காவல் நிலையம் அருகே சிவகங்கை-- மதுரை மாவட்ட எல்லை பகுதியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X