பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் பதிக்கும் பணி தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அண்ணா நகர்:மக்கள் கோரிக்கையை ஏற்று, லாரி குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, குழாய்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த வாரிய அதிகாரிகளை, மக்கள் பாராட்டுகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 15மண்டலங்களில், 41 நீரேற்று நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில், மக்களுக்கு, குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது.குழாய்களில் குடிநீர் வினியோகிக்க முடியாத பகுதிகளில், லாரிகளில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு லாரியில் வழங்கப்படும்போது, ஒரு சிலருக்கு மட்டுமே, குடிநீர் கிடைப்ப தாகவும், ஒரு சில அரசியல் கட்சியினர், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, மக்களுக்கான குடிநீரை, அவர்களது வீட்டில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஊற்றிக் கொள்வதாகவும், புகார் எழுந்தது.எனவே, லாரி குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, குழாய்களில் குடிநீர் வழங்க வேண்டும் என,மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்ற அண்ணா நகர் மண்டல அதிகாரிகள், முதற்கட்டமாக, 98வது வார்டு பம்பிங் ஸ்டேஷன் சாலை, டேவிட்புரம், குட்டியப்பன் தெருவில் புதிதாக, 1 கோடி ரூபாய் செலவில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.பணி முடிவடைந்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரி, சுரேஷ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X