பொது செய்தி

தமிழ்நாடு

13 புதிய சோதனைச்சாவடி அமைப்பு ; எஸ்.பி., ஜெயக்குமார் தகவல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் வெளி மாவட்ட நபர்களை கண்காணிக்க புதியதாக 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எஸ்.பி., தலைமையில் 10 டி.எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில் 24 பைக் பேட்ரோல் வாகனங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பைக்கிற்கு 2 போலீசார் மூலம், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணியில், மாவட்டத்தில் உள்ள 13 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும், மாவட்ட எல்லைகளில் 13 இடங்களில் புதியதாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட எல்லைகளான கெங்கராம் பாளையம், சின்னகல்லிப்பட்டு, மணம்பூண்டி, ஆனத்துார், மடப்பட்டு, திருக்கனுார், ஓங்கூர், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாப்பாம்பாடி, ஞானோதயம், மழவந்தாங்கல், பட்டானுார், தாழங்காடு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 2 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சுழற்சி முறையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். மேலும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரியில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி, ஆரோவில் ஆகிய நகரங்களில் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கியில் தகவல் தெரிவிக்கப்படும். பஸ் நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

மேலும், கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பரப்படும் அவதுாறு தகவல்கள் கண்காணிக்கப்படுகிறது. அப்படி விழுப்புரம் மாவட்டத்தில் அவதுாறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டம் தற்போது முழு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. மாவட்ட மக்கள் அரசுக்கும், காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு எஸ்.பி., ஜெயக்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X