பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த நபர் சுகாதாரத் துறையினரால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்டாச்சிபுரத்தில் சிங்கப்பூரில் இருந்து கடந்த 17ம் தேதி வந்த இளைஞரை நோய் தொற்று இல்லாத நிலையிலும், முகையூர் வட்டார சுகாதாரத் துறையினர், தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி நேற்று காலை டாக்டர் சுகுமாறன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய அந்த இளைஞரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினர்.சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வி.ஏ.ஓ., சின்னதுரை, வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாராமன், சையத் அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் தெருவில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.திண்டிவனம்திண்டிவனம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 25 வயது வாலிபர், பல்வேறு நாடுகளில் கப்பல் பயணம் மேற்கொண்டவர் சமீபத்தில் இத்தாலி சென்று, வீடு திரும்பியுள்ளார். இவருக்கு விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டாலும், சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், 18ம் தேதியிலிருந்து வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டிவனம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 55 வயதுள்ள ஒருவர், சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர், கடந்த 22ம் தேதியிலிருந்து வரும் 4ம் தேதி வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விலகி இருப்பதற்காக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் இந்த நோட்டீஸ்கள் வீட்டின் கதவுகளில் ஒட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X