பொது செய்தி

தமிழ்நாடு

அடையாறில் தரமற்ற குடிநீர் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

Added : மார் 24, 2020
Share
Advertisement
 அடையாறில் தரமற்ற குடிநீர் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

சென்னை:அடையாறு மற்றும் கண்ணகி நகர் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் தரமில்லை என, வெளிவந்த பரிசோதனை ஆய்வு அறிக்கை, பகுதிமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிர் வாழ, குடிநீர் மிக முக்கிய பங்காற்றுகிறது.
நோய் உருவாக, குடிநீரும் ஒரு காரணமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி பகுதியில், வாரியம் வழங்கும் குடிநீரை தான் பொதுமக்கள் நம்பி உள்ளனர். அதுவும், தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் என, நம்புகின்றனர்.இதற்கு மாறாக, அடையாறு பகுதியில் வினியோகிக்கும் குடிநீரின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. அடையாறு, வெங்கடரத்தினம் நகரில் சில மாதங்களாக, குடிநீர் மஞ்சள் கலரில், துர்நாற்றம் வீசி குடிக்க, சமைக்க முடியாத அளவுக்கு வந்து உள்ளது.பகுதிமக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஒரு கட்டத்தில், நீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து, வெங்கடரத்தினம் நகரின் வினியோகிக்கப்படும் குடிநீர், வாரிய நீர் தர ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவு, பகுதிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குடிநீர், மங்கலாக மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன், இரும்பு தன்மை அதிகமாக இருந்துள்ளது. இந்த குடிநீர் தரமற்றது என, வாரியம் ஆய்வு அறிக்கை அளித்துள்ளது.அதன் பிறகும், பாதுகாப்பான குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அதிகாரிகள் மீது, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோன்று, 195வது வார்டு, கண்ணகி நகரில் வினியோகம் செய்யும் குடிநீரும் தரமில்லை என, ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.குடிநீர் துர்நாற்றம் வீசி, மஞ்சள் கலரில் வருவதாக, பல மாதமாக வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். ஆய்வு அறிக்கையும், தரமற்ற குடிநீர் என தெரிவிக்கிறது. அதன்பிறகும், எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆய்வு முடிவுகளை, அதிகாரிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதே தரத்தில் குடித்தால், பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பகுதிமக்கள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X