பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம், கையுறை தட்டுப்பாடு பரமக்குடியில் போலீசார் சோதனை 

Added : மார் 24, 2020
Share
Advertisement
 முகக்கவசம், கையுறை தட்டுப்பாடு பரமக்குடியில் போலீசார் சோதனை 

ராமநாதபுரம் : பரமக்குடியில் முகக்கவசம், கையுறை, கிரிமி நாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.

கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் பீதியில் உள்ளனர். முகக்கவசம், கையுறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதிக விலைக்கு விற்பனை, பதுக்கல் செய்யப்படுவது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவின் பேரில் இளங்கோ டி.எஸ்.பி., மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, எஸ்.ஐ., சசிகலா, போலீசார் பாலு, ஜெயப்பிரியா, சாராள், சதீஷ் உள்ளிட்டோர் பரமக்குடி, முதுகுளத்துார், சத்திரக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.

முககவசம், கிரிமிநாசினி, கையுறைகள் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யவும், அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது, என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X