பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பாதிப்பு 15 ஆக அதிகரிப்பு :3 பேருக்கு தீவிர சிகிச்சை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை, :சென்னையில், இளம்பெண் உட்பட மேலும் மூன்று பேருக்கு 'கொரோனா' உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் பாதிப்பு 15 ஆக அதிகரித்துள்ளது.ஸ்பெயினில் இருந்து வந்த கோவை மாணவி, அமெரிக்காவில் இருந்து வந்த மூதாட்டி, தாய்லாந்தை சேர்ந்த 2 நபர்கள் உட்பட 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்த வந்த போரூரை சேர்ந்த 74 வயது முதியவர்; புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்; சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த கீழ்கட்டளையை சேர்ந்த 25 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனாவால் தமிழகத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 1,000க்கும் மேற்பட்டோர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் சிகிச்சை பெறும் 54 வயது ஆண்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 64 வயது மூதாட்டி; போரூரை சேர்ந்த 74 வயது முதியவர் ஆகியோரின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்றனர்.

743 பேரிடம் பரிசோதனைவெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு 2.9 லட்சம் பேர் வந்துள்ளனர். இதில் 15 ஆயிரத்து 298 பேர் தங்கியிருக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில்உள்ளனர்.743 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 608 பேருக்கு பாதிப்பு இல்லை; 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X