பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

புவனகிரி அரசு மருத்துவமனையில் டாக்டர் முத்துக்குமரன், பேரூராட்சியில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், இந்திராதேவி தடுப்புமுறைகள் குறித்து விளக்கிக் கூறினர்.கிராமங்களில் நோய் தாக்கம் ஏற்படாமல் தடுக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கிராமங்களில் ஊராட்சி அமைப்புகள் மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கவும் எம்.எல்.ஏ., சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது ஒன்றிய செயலர்கள் டாக்டர் மனோகர், மதியழகன், நகர செயலர் கந்தன், ஊராட்சித் தலைவர்கள் அப்பாரவிக்குமார், இளங்கோவன், முத்துராமன், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X