சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தத்கல் கவுன்டர் மூடல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை:சென்னை பாஸ்போர்ட் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வந்த, தத்கல் மற்றும் விசாரணை கவுன்டர்களும், வரும், 31ம் தேதி வரை மூடப்படுவதாக, அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும், வரும், 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.சென்னை, அண்ணாசாலை ராயலா டவரில் உள்ள, தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வந்த தத்கல் மற்றும் விசாரணை கவுன்டர்களும், 31ம் தேதி வரை மூடப்படுகின்றன.இதனால், பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம், தத்கல் மையங்களுக்கு வருமாறு, ஏற்கனவே அழைப்பு பெற்றவர்கள், தங்களது வருகையை, மார்ச், 31க்குப் பின் மாற்றிக்கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.வருகையை மாற்றியமைக்க, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இயல்பு நிலை திரும்பும் வரை, எத்தனை முறை வேண்டுமானாலும், வருகையை மாற்றிக் கொள்ளலாம்.இது தொடர்பான கூடுதல் விபரங்களை, 044 - 2851 3639, 2851 3640 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது rpo.chennai@mea.sov.in என்ற இணையதளம் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X