பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் தடுப்பு பணிகள் தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள், பார்வையாளர்களுக்கு தடைவிதித்து, நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். அதில், மகப்பேறு, முடநீக்கியல், பொது அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருடன் ஒன்றிண்டு பேர், உடன் தங்குவது வழக்கம்.மேலும் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து உணவருந்திவிட்டு, கழிவுகளை வீசிச் செல்கின்றனர் .

மேலும் எச்சில் துப்புவது போன்ற செயல்களை செய்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தை துாய்மையாக பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் சிரமமடைந்தனர்.இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு கட்டடத்தில் தனி வார்டு துவங்கப் பட்டுள்ளது.இதுவரை அறிகுறியுடன் நோயாளிகள் யாரும் வராத நிலையில், மருத்துவமனை வளாகத்தை துாய்மையாகவும், கூட்ட நெரிசலின்றி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, புற நோயாளிகள் சிகிச்சை நேரம் முடிந்ததும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றி, முகப்பு வாசல் மூடப்படுகிறது. அப்போது, அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் உள்ளே வரும் நோயாளிகளின் உறவினர்களை மட்டும் அனுமதித்து நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X